உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 ல்லாதவை: வாரச் சந்தை,உயர்நிலைப்பள்ளி ஏற் பட்டு 120 ஆண்டாகியும் கல்லூரி. பாவை தந்த இந்நகரில் பிறந்த பெருமக்கள்: ஆண்டாள், பிரபந்தம் பாடிய பெரியாழ்வார், தருமை ஆதீனம் நிறுவிய குருஞான சம்பந்தர். பாரதம் இயற்றிய வில்லிபுத்தூரார் இவ்வூரார் அல்லர்; அவர் பிறந்த ஊர் சனியூர் என்பர், சிலர். பெரியதிருவிழா: ஆடிப்பூரம். இந்நகரின் பிற பெருமைகள்: 70 அடி உயரமும் 9 சக்கரங்களும் உடைய "ராஜா" தேர்,பெனிங்டன் நூல் நிலையம், கூட்டுறவு பால்பண்ணை, சுவையான குடிநீர் 1856-இல் ஏற்பட்டு முதல் தலைமையாசிரியரான ஹவ்டன் பெயரால் உருவாகியுள்ள ஹவ்டன்புரத்தில் சிறந்து விளங்கும் கிறித்தவ மிசனரி சொசைட்டி உயர் நிலைப்பள்ளி, ஆண்டாள் கோவிலில் படைக்கப்படும் அரவணை (இது ஹல்வாவின் சுவையுடைய சர்க்கரைப் பொங்கல்) பிட்டு, அதிரசம். சர்க்கரைப் பொங்கல், தேன்குழல் இவையாவும் தூய நெய்யில் செய்யப்படுவது மரபு. சுற்றுவட்டத்தில் காணத்தக்க இடங்கள்: முக்கனி மரங் களும் கழுகு மரங்களும் அடர்ந்த செண்பகத்தோப்பு நீர்வளம் நிறைந்த வழுக்கும் பாறை, முதலியார் ஊற்று. குடை இந்நகரில் செய்யப்படும் கைவினைப் பொருள்: தாழங் இந்நகரில் நிலவும் கருத்து வேறுபாடு; சிவன் கோவி லாக, ஸ்ரீசெண்பகக் குழலாள் சமேத வடவால் ஈசுவரன் கோவில் என்ற பெயருடன் இருந்த கோவிலில் வைணவர்