உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வாழும் மக்கள் இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1961-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 24,21,708. தொழில் வளம் நிறைந்த சிவகாசி, சாத்தூர் வட்டங்களிலும், பிறவட் டங்களில் வைகைக் கரையிலும் மக்கள் நெருக்கம் மிகுதி யாக இருக்கிறது. இராமேசுவரம் தீவிலும், திருவாடானை வட்டத்திலும் மக்கள் நெருக்கம் குறைந்துள்ளது. தமிழ் நாட்டில் சதுர மைலுக்குச் சராசரி 638 பேர் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் சராசரியாக 455 பேரே வாழ்கின்றனர். வேறு எந்த மாவட்டத்தையும் விட இங்குதான் மக்கள் நெருக்கம் குறைவு. கார ணங்கள் - நீர்வளமின்மை, தொழிலின்மை, கடல்கடந்த நாடுகளுக்குக் குடியேற்றம். - செங்கற்பட்டு, கன்னியாகுமரி, தருமபுரி, நீலகிரி மாவட்டங்கள் மட்டுமே இராமநாதபுரத்தைவிட மக்கள் தொகை குறைந்தவை. ஒரு லட்சத்தை எட்டிய நகரம் ஒன்றேனும் இல்லை. மிகப் பெரிய நகராக இம்மாவட்டத்தில் விளங்கும் இராஜ பாளையத்தின் மக்கள் தொகை 71,003. அடுத்தடுத்த நகரங்கள் - விருதுநகர் (54,827). அருப்புக்கோட்டை (50,200),ஸ்ரீ வில்லிபுத்தூர் (46,816). காரைக்குடி (43,698). இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தோ-சீனா, மொரிசுத்