உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

311 வற்றாயிருப்பு பிர்க்காவுக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ள நத்தம்பட்டி பிர்க்கா, புன் செய்த் தானி யங்கள் விளையும் பகுதியாக இருக்கிறது. இவ்வொன் றியத்துப் புன்செய்த் தானியங்காளவன - சோளம்; எள், சிறிதளவு கரும்பு. இரண்டாவது போகத்துக்கு நெல்லைப் போடாமல் உகண்டா பருத்தியைப் பயிரிடு வது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாகிவிட்டது. P இவ்வொன்றியத்து வளமான நிலங்கள் பெரும் பாலும் அந்தணரின் உரிமையாக இருந்தன- கம்யூனிஸ்டுக் கட்சியின் கிளர்ச்சிகளின் விளைவாக, அந்தணர்கள் தம் நிலத்தை 1950 முதல் விற்றுக் கொண்டே வருகின்றனர். மேற்குப் பகுதியில் தென்னந் தோப்புக்கள் ஏராள மாக உள்ளன. மாந்தோப்புக்களில் இராஜபாளையம் சப்போட்டா மாம்பழங்கள் பெரிய அளவில் காய்க்கின்றன. அரசாங்கக் காட்டியல் துறையினர், இவ்வொன்றி யத்திலுள்ள ரிசர்வுக்காடுகளில் மென்மையான மரங்களை யும் முந்திரிச் செடிகளையும் பயிரிட்டுவருகின்றனர். இவ்வொன்றியத்திலுள்ள ஒவ்வொரு ஊராட்சி மன்றமும் மாந்தோப்பு, புளியந்தோப்பு, தென்னந் தோப்பு ஆகியவற்றை உண்டாக்கியும் நாவல்,மதுரம், வேம்பு, நெல்லி ஆகிய மரங்களை நட்டும் இருப்பது பாராட்டுக்குரியது. - சாலை போக்குவரத்து: மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர்ச் இவ்வொன்றியத்தின்வழியே செல்லுகிறது. குறிப்பிடத் தக்க வேறு சாலைகள் இல்லை. பெரும்பாலான ஊர்கட்கு பஸ் வசதி உண்டு. மலைப் பகுதிக்குப் வண்டிப்பாதை