518 ஊராகும். வரலாற்றுத் தொடர்புள்ள ஊராகவும் இருக்கவேண்டும் என்பது ஊர்ப் பெயரிலிருந்து உணரலாம். இவ்வூரினர் இந்தியாவின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பங்கு கொண்டுள்ளனர். இவ் வூரருகே 1958 முதல் சிலகாலம் காந்தி ஆசிரமம் என்ற நிறுவனம் சிறப்பாக நடைபெற்றது. இங்கும் ரெங்கப்ப நாயக்கன்பட்டியிலும் ராஜமன்னரீக க்ஷத்தி ரிய கம்மவர்கள் தங்கள் குலய்ெவமான எல்லையம்மனுக்கு கோவில் கட்டியுள்ளனர். மாவூத்துக் கோவில்: வற்றாயிருப்பிலிருந்து 6கி.மீ தொலைவில் உள்ள குறிஞ்சிநில ஊர். சதுரகிரிக்குச் செல்லுபவர்கள் மாவூத்துச் சாமியார் அடங்கியுள்ள க்கோவிலை வழிபடுகின்றனர். இவ்வூரி முதலியார் ஊற்று: ம் தீப்பகுதியிலுள்ள லிருந்து சின்னமனூர் தேனி முதலிய ஊர்களின் தோற் றத்தைச் காணலாம். வேட்டையாடவும் பொழுது போக்கவும் வெள்ளைக்கார அதிகாரிகள் வருவது வழக்க மாக இருந்தது. அழகர் கோயில் 8 கி.மீ. தொலைவு. மூவரை வென்றான்: (ம. தொ. 2,00)) அழகாபுரியி லிருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இங்கு வாழைத் தோட்டங்கள் மிகுதி. இவ்வூரில் கோவில் கொண்டுள்ள ஐயனார் வற்றாயிருப்பு வாழ் மக்கள் பலரின் குலதெய்வமாக இருந்து வருகிறது. ஒரு கி.மீ. தொலைவில் 400 அடி உயரமான மொட்டைமலை இருக்கிறது. இம்மலையில் சுனையும் குகைக் கோயிலும் உள்ளன. நந்தியின் வாயினின்று நீர் ஊற்று கிறுது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/520
Appearance