உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

543 கவினோங்கு முகவைநகர் கவிராயர் பற்பலருள் செவியோங்கப் பெருந்தொகை நூல் செப்பியமு. இராகவனார்! படியேறி இறையவனும் பசிக்குணவு கேட்க,வுடன் பிடிசெந்நெல் வடித்தெடுத்து பெட்புறவே தருமிளையான் குடிமாறனோடு கவி குஞ்சரமும், வில்லிப்புத்தூர் அடியாராம் பெரியாழ்வார் அவதரித்த புனிதமொடு எல்லையறும் பரம்பொருளாம் எழிற்கண்ணன் கணவரெனச் செல்வியெங்கள் ஆண்டாளும் திருப்பாவை நோற்றதுவும் வில்லெடுத்த இராமனுக்கு விரிஞான வாசிட்டம் வெல்லுதமிழ் மொழியினிலே விளக்கிவைத்த பெருமையுடன் தண்டமிழின், சுவைமணக்கச் சௌந்தர்ய லகரிதனை எண்டிசையும் புகழ்மணக்க இசைத்தளித்த கவிராஜ பண்டிதரும், சீலேடைமிகப் பாடுபுலி வேம்பத்தூர் மண்டுபுகழ்ப் பிச்சுவையர், மற்றுமிங்கு தாய் நாட்டின்