59, எல்லையிலுள்ள புதுவயலில் நெல் அறைக்கும் ஆலைகள் ஏராளமாக உள்ளன. பிற : கம்பு, கேப்பை; கேழ்வரகு, நெல் தவிர ஏனைய உணவுப் பொருள்கள் மாவட்டமெங்கும் ஓரளவு பயிரிடப் படுகின்றன. கடலை: மாவட்டத்தின் பெரும்பகுதியில், குறிப்பாகச் சிங்கம்புணரிப் பகுதியில் மணிலாக் கடலை வேளாண்மை பெரிய அளவில் நிகழுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் கடலை விதை ஆராய்ச்சி நடைபெறுகிறது. Zonal Nucleus Seed Farm என்ற பெயரில், கிருஷ்ணன்கோவில் அருகே 50 ஏக்கர்ப் பரப்பில் ஒரு மாதிரிப் பண்ணை செயல்படு கிறது. திண்டிவனத்திலிருந்து வரவழைத்த விதைகளை ங்கு பொறுக்கி, இனவாரியாகப் பிரித்து, உழவர் களுக்கு வழங்குகின்றனர். சூரியகாந்திப் பூ எள்: இந்த எண்ணெய் வித்தினை இம்மாவட்டத்தில் பயிரிட அரசினர் திட்டமிட்டு வருவ தாகத் தெரிகிறது. கரும்பு: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் சர்க்கரை ஆலை ஏற்பட்ட பிறகு, ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகங்கை வட்டங்களில் சிறு அளவில் கரும்பு பயிரிடப் படுகிறது. சில இடங்களில் வெல்லம் காய்ச்சுவதற் காகவும கரும்பு பயிரிடுகின்றனர். பருத்தி: இம்மாட்டத்தின் இம்மாட்டத்தின் முக்கிய பயிர்களுள் ஒன்று, பருத்தி. மென்மையான துணிகளையே மக்கள் இந்நாளில் விரும்புகின்றனர். இவற்றை உற்பத்தி செய்ய, ஆலைகள் வெளிநாடுகளிலிருந்து நீண்ட இழைப் பருத்தியை வர வழைக்கின்றன. நம் நாட்டிலும் இவ்வகையான உயர்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/61
Appearance