உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. திருவாடனை வட்டத்தில் சவுக்கு, கர்ப்பூர மரத் தோட்டங்களை அரசினர் உண்டாக்கி வருகின்றனர். பிரான்மலைக் காடுகளில் வெறும் சருகும் ஓடை மரங்களுமே உள்ளன. ஆத்திக்காடு, வேலங்குடி, கோவிலூர், மணச்சை, செஞ்சைக் காடுகளிலும் திருப் பத்தூர் சிவகங்கை வட்டங்களின் பிற காடுகளிலும் 10,000 ஏக்கரில் முந்திரி பயிரிடப்பட்டிருக்கிறது. சிவகங்கை வட்டத்தில் அடர்த்தியான காடுகள் 18-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இருந்தன. மருது சகோதரர்களை எதிர்த்த ஆங்கிலப்படை விரைந்து செல்ல அவையே தடையாக இருந்தன. . இராமேசுவரம் தீவிலும், இராமநாதபுரம் வட்டத் தின் பிற பகுதிகளிலும் கடல் அரிப்பைத் தடுக்க அர சினர் பல்லாயிரம் ஏக்கரில் சவுக்கு மரங்களைப் பயிரிட் டிருக்கின்றனர். 1952-க்குப் பின் இலங்கை அகதி களுக்கு உதவ, அரசினர் துணையுடன் பல்லாயிரம் ஏக்கரில் தென்னை பயிரிடப் பெற்றிருக்கிறது. உச்சிப் புளியிலும் சிங்கம் புணரியிலும் அரசினர் தென்னை நாற்றுப் பண்ணைகள் உள்ளன, ற சதுரகிரிமலையில் சாதிலிங்கம் என்ற உயர் சாதி மரம் இருக்கிறது. இது தொட்டில் செய்யப் பயன் படுகிறது. இதைக குறித்து, சதுரகிரி மலையேறிச் சாதிலிங்கக் காட்டை வெட்டிச் சேர்த்துப் பணிப்படுத்திச் சித்திரத்தில் ஒப்பமிட்டு என்ற நாட்டுப் பாடல் வழங்குகிறது.