உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப" எனவும் கூறு கிறது. "செந்தமிழ் நாட்டுப் பொருநர்--கொடுங் தீக்கண் மறவர்கள் என்று கவியரசர் சுப்பிரமணிய பாரதியார், இவர்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். "மனத்திண்மை வாய்ந்த வீரரை மறவர் என்று அழைத்தனர் பழந்தமிழர். அவர் கல்லெனத் திரண்ட தோளர்; கட்டமைந்த மேனியர்; முறுக்கு மீசையர்; தருக்கு மொழியினர்; வீறிய நடையினர்; சீறிய விழி யினர்" என்கிறார் சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப் பிள்ளை. மறவர், வீரம் செறிந்தவர்கள். குஸ்தி, சிலம்பம், வாள் வீச்சு, வில்லடி, வேட்டையாடல், விளரிக் கம்பு வீச்சு, மால்கம்பம் போன்ற உடற்பயிற்சிகளில் மறவர் சிறந்தவர். சோழ, பாண்டியர் படைகளில் இவர்கள் பணியாற்றி அவ்வரசுகளுக்கு உறுதுணையாய் இருந்து எல்லைகளைக் காத்தனர்; எதிரிகளை அழித்தனர். தமிழ் நாடெங்கும் பல பகுதிகளில் இவர்கள் குடியேற்றப்பட்டு, காவல் புரியும் படையினராக வைக்கப்பட்டிருந்தனர். ஏன் எனில், இவர்கள் 'புகழ் எனின் உயிரும் கொடுக் குவர்; பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர். (புறநானூறு 'உண்டாலம்ம) 'மறவர் கொடுப்பது வளரிப் பிரசாதம்' என்று ஒரு பழமொழி உண்டு. வளரி என்பது வயிர மரத்தால் செய்த ஈட்டிக்கம்பு அல்லது அரிவாள். ஒருவன் வளரி யால் கொல்லப் பெற்றால், வளரியை வீசியவனைப் பிடித் துக் கொல்ல வேண்டுமென்று விரையாச்சிலைக் வெட்டில் தெரிவிக்கப் பெற்றிருக்கிறது. கல்