கொண்டையன் கோட்டை, வல்லம்பர்,சிறு தாலி கட்டி மறவர் என்ற பிரிவுகளும் மறவரில் உண்டு. பலர் 'பாண்டியன்' என்ற இறுதிச் சொல்லைப் பெயருடன் போட்டுக் கொள்ளுகின்றனர். மறவர் நாடு வளமற்றது. அங்கு. தொழில் எனப் படுவது வேளாண்மை மட்டுமே; அதுவும், மழை பெய்தா லேயே செய்யக் கூடியது வான் பொய்த்த ஆண்டுகளில், சோழ வளநாட்டுக்குச் சென்று வேலை செய்து சோறுண்ண வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இம் மாவட்டத்து மறவர். இவருள் சிலர், வன் செயல்களி லும் ஈடுபட்டதுண்டு. எனவே, ஆங்கில அரசாங்கமும் உரிமை பெற்ற சுதந்தர இந்திய அரசாங்கமும் இவர்கள் மீது து கடுமையான நடவடிக்கைகள் எடுத்தன. மறவர் அனைவரும் குற்ற பரம்பரைச் சட்டப்படி அறிவிக்கப்பட னத்தார் ஆயினர். இதனால் இவர்கள் பல வகையான கேவலங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். ஏராளமான போலிசுப் படையை வைத்தே, இவர்கள் வாழும் பகுதி களில் அரசின் ஆணைகளைச் செயல்படுத்த நேரிட்டது. இவர்கள் போர்ப்படையில் சேர்ந்து, இந்திய நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். . க் இப்பெருங் குழுவினர் தொன்று தொட்டு மேன்மை வாய்ந்திருந்ததற்குச் சான்றாக, சேதுபதிகள் உள்ளனர். ஆற்றலும் ஆண்மையும் வாய்ந்த மறவா குலத்தவரான குகனுக்கு, இராமபிரான் முதல் சேதுபதி என்ற பட்டத் தைச் சூட்டியதும், பாண்டிய மன்னன் சேதுபதிக்குக் கடற்கரை யோரத்திலிருக்கும் காடுகளையெல்லாம் வழங் கியதும் இங்கு கருதத்தக்கன. புண்ணிய புண்ணிய சேதுவின் காவலராய், சேதுபதிகள் இருந்து வருகின்றனர். அவர் கள் கொடியில் கருடன். அநுமனின், உருவங்கள் பொறிக்கப் பெற்றிருக்கின்றன. இராமேசுவரம் கோவி .
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/88
Appearance