பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 தையும் குந்துகாலையும் கைப்பற்றி, மேற்கு நோக்கி வந்து வேதாளை போன்ற இடங்களில் போரிட்ட பொழுது பாம்பன் கால்வாயைக் கடந்து வந்ததாக இலங்கை வரலாற்றில் குறிப்பு எதுவும் இல்லை. கி. பி. 1480 இல் ஏற்பட்ட புயலும் கடற் கொந்தளிப் புந்தான் பாம்பன் கால்வாய் ஏற்படக் காரணமாக அ ைம ந் த து. மண்டபத்திற்கும் பாம்பனுக்கும் இடைப்பட்ட குறுகலான பகுதி கடலில் அமிழ்ந்துமணற் பகுதி மறைந்து பாம்பனும் இராமேஸ்வரமும் உள்ள பகுதி சிறு தீவாகியது. அடுத்தடுத்து ஏற்பட்ட புயல். கள்ால் இப்ப்குதி இன்றுள்ள 2. 7. கி. மீ. அளவு கடல்: பகுதியாக மாறிவிட்டது. இதே காலத்தில் தான் இன்றைய பாம்பன், கீழக்கரை, மாரியூர் ஆகிய ஊர் களுக்கு எதிரே கடலில் சில மைல் தொலைவில் உள்ள பன்னிரண்டு சின்னஞ்சிறு தீவுகளும் ஏற்பட்டிருக்க வேண்டும். பாம்பனுக்கும் மண்டபத்திற்கும் இடையில் உள்ள கடற்பகுதியில் 420 அடி தூரத்தில் ஏற்பட்ட இருபாறைத் தொடர்கள் படகுப் பயணத்திற்கு இடையூருக இருந்து வந்தது. இது பாம்பன் பார் என அழைக்கப்பட்டது. * H ■ இராமநாதபுரம் சேதிபதி மன்னரால் பாம்பனின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தவர் தண்டத்தேவர். தனது அனுமதியில்லாமல் இராமேஸ்வரம் பயணி. களிடம் தீர்வை வசூலித்தது சிவத்துரோகம் என முடிவுசெய்து, தனது இரு பெண்களின் கணவர் என் பதையும் கருதாது மன்னர் அவருக்கு மரண தண்டனை வழங்கினர். இளவரசிகள் இ ரு வ ரு ம் தீக்குளித்து மாண்டனர். பிற்காலத்தில் அப்பெண்களின் நினைவாக