பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயரும் இராமனும் ேே - 125 கற்றைகள் கோணம் மாறி அலர்ந்த செந்தாமரை மேல் பட்டு முன்பு இல்லாத அழகை இப்பொழுது தோற்றுவித்துப் பின்னர் மறைந்துவிடுவது போல் இங்கேயும் ஒன்று நடைபெறுகிறது. அலர்ந்த செவ்வி என நிற்கும் இராமன் காதுகளில், கைகேயி கூறிய (அதாவது, தாழிடும் சடைகள் தாங்கி . ஆண்டின் வா என்ற சொற்கள் புகுகின்றன. சூரியனுடைய ஒளி புதிய கோணத்தில் தாமரையில் படுவதுபோல, இராமனுடைய தாமரை முகத்தோடு இணைந்த செவியில் அச் சொற்கள் புகுகின்றன. கதிரவன் ஒளிக்கற்றைக்கு இச் சொற்கள் உவமையாகும். புதிய கோணத்தில் வரும் அந்த ஒளிக்கற்றைகள் சில வினாடிகள் மலரின் அழகை மிகுதிப்படுத்துவது போல் இராமன் திருமுகச் செவ்வியில் இச்சொற்கள் முன்னர்க் காணாத புதிய அழகைச் சில வினாடிகள் தோற்றுவிக்கின்றன. அதன் பிறகு பழைய அழகே அங்கு நிலைபெறுகிறது. இதைத்தான் கவிஞன், "அவ்வாசகம் உணரக்கேட்ட பின்பு ................ செந்தாமரையினை வென்றதம்மா” என்று கூறுகிறான். கதிரவன் ஒளிக்கற்றைகள் வெப்பம் மிகுந்தவையாய் இருப்பினும் தாமரைக்குப் புதுமெருகூட்டுவது போலக் கைகேயியின் கொடுமை நிறைத சொற்கள் சமதிருஷ்டி உடையவனும், ஸ்திதப்பிரக்ஞனும் ஆன இராமன் முகத்தில் புதியதோர் அழகை சிலவினாடிகள் உண்டாக்கின என்றதுணுக்கத்தைத்தான் இந்த ஒரு பாடலின் மூன்று அடிகளில் கம்பநாடன் விளக்குகிறான். இதனை அடுத்துவரும் பாடல் (1603 மறுபடியும் நம் சிந்தனைக்கு உரியதாகும். மன்னன் தசரதன், 'இவ்வாட்சியை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றபோது, விருப்பு வெறுப்பு இல்லாமல் கடமை என்றுணர்ந்து கர்மயோகியாய் நின்று அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பித் தந்தையின் முன்நின்ற இராகவன் முகத்தைக் கற்பனை செய்து பார்க்கிறான் கவிஞன். இப்பொழுது அதே அரசன் பெயரால் அப்பொறுப்பு அவனிடமிருந்து நீக்கப்பட்டவுடன் அவன் முகத்தைக் கற்பனையில்