பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் ேே 147 கொண்ட வரத்திற்காக அவளைப் பாவி என்று ஏசும் பரதன் இராமன் கூறிய வரனில் உந்தை சொல்' என்ற ஒரு பாடலைக் கேட்டு, தான் அரசன் என்பதை ஏற்றுக்கொண்டு, இப்பொழுது நான் அரசன், என்னுடைய அரசை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க எனக்கு உரிமை உண்டு, இப்பொழுது நான் உனக்குத் தருகிறேன் என்று கூறுவானாகில் இந்த மாபெரும் மனமாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைச் சிந்திக்காமலேயே பாடலுக்கு உரைகண்டனர். முன்னர் காட்டப்பெற்ற வான்மீகியின் பாடல்களில் இரண்டாவதாக உள்ள பாடலைச் சற்றுக் கவனிக்க வேண்டும். தம்பியைப் பார்த்து இராகவன், "பரதா! இந்தக் கோசல ராஜ்ஜியத்தை நீ ஏற்றுக்கொண்டு தந்தையைக் கடனிலிருந்து விடுவிப்பாயாக" என்று கூறுவதன் நோக்கம் யாது: ராஜசுல்கம் காரணமாகத் தசரதனுக்குப் பிறகு இந்தக் கோசல ராஜ்ஜியம் அவன் வாக்களித்தபடி கேகேயனுக்கோ, அவன் மகள் கைகேயிக்கோ அல்லது அவள் மகன் பரதனுக்கோ, சேரவேண்டும். இப்பொழுது, ராஜ்ஜியம் பரதனைச் சேர்ந்தால் தான், தசரதன் பட்ட கடன் அடைப்படும். இந்தப் பாடலின் பொருளை மனத்துட் கொண்டே கவிச் சக்கரவர்த்தி, உந்தை சொல் மரபினாய், அவனுடைத் தரணி, நீ பிறப்பதற்கு முன்பே உனது என்று இயைந்து விட்டது. நீ பிறந்ததால் உன் பாட்டனுக்கும் தாய்க்கும் - அதாவது உன் முன்னோர்களுக்கு, இயைந்து விட்ட இந்த அரசு நீ பிறந்ததால் உனக்கு உரிமை ஆயிற்று' என்ற பொருளில் பேசுகிறான். இந்த உரிமைப் பொருள் அவனிடம் சேருகின்ற வரை தசரதன் கடன்பட்டவனாகவே இருக்க நேரிடும் என்ற பொருள் தொனிக்க உனக்கு உரிமையான அரசை ஏற்று ஆள்க' என்று இராகவன் கூறினான். . . . . கன்யா சுல்கம் பற்றிக் கம்பன் வெளிப்படையாகக் கூறாதது ஏன்? - வான்மீகியை இவ்வளவுதூரம் அடியொற்றிப்பாடுகின்ற கவிச்சக்கரவர்த்தி ஏன் கன்யா சுல்கத்தை நேரடியாகக்