பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் ே 175 ஒன்றையே துணையாகக் கொண்டு, இலக்குவன் கூறும் வாதங்கள் ஆணித்தரமானவை என்பதில் ஐயமில்லை. அதற்கு விடை கூறும் இராமன் அறிவின் துணைகொண்டு இலக்குவனைப்போல் ஆயாமல், காதல் உணர்வில் நின்று சீதையின் துயரைத் துடைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் நிற்கிறான் என்றாலும், இலக்குவன் எடுத்து வைக்கும் மூன்று வாதங்களுக்கும் தக்க சமாதானம் கூறி விடுகிறான். இராகவனுடைய மூன்று விடைகளையும் ஒன்றாக்கிப் படித்தால், தான் கொண்ட கருத்தை நிறைவேற்ற விரும்புபவன் விடையாக அவை அமைந்துள்ளதைக் காணலாம். இலக்குவன் - புதிய பரிமாணம் இந்த நேரத்தில், இலக்குவனின் அறிவுபூர்வமான வாதத்தைப் அவன் படிப்படியாக முன்வைக்கும் மூன்று வாதங்களையும் படிக்கும்பொழுது இலக்குவனின் புதிய பரிமாணத்தைக் காணமுடிகிறது. அயோத்தியா காண்டத்தில், "பெரியன்னையையும் பரதனையும் வென்று இராமனுக்கு முடிசூட்டப்போகிறேன். இதைக் காக்குநர் காமின்; விதிக்கும் விதியாகும் என் வில் தொழில் காண்டி” என்று பேசிய இலக்குவனா பொன்மான் பற்றி இவ்வளவு அற்புதமாக வாதங்களை அடுக்குகிறான் என்ற வியப்பு நம் மனத்தில் தோன்றுகிறது. அயோத்தியில் இருக்கும்வரை ஓர் அரசன், மூன்று தாயர்கள், நான்கு மைந்தர்கள் என்ற எட்டுப்பேரில் இலக்குவன் ஒருவன். அவன் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாலும், ஏதோ ஒன்றைச் செய்தாலும் அது மிகப் பெரிதாக விளைந்து விடாது. ஆனால், அதே மனநிலையில் வனத்திடை வைகும்பொழுது அவனிருந்தால் அதனால் விளையும் நன்மை தீமைகள் மிகப் பெரியவையாகிவிடும். உடனுள்ள இராமனும் சீதையும் அதனால் பாதிக்கப்படவும் நேரிடும். இவற்றையெல்லாம் மனத்தில் எண்ணித் தன் வாழ்க்கையையே மாற்றிக்கொண்டான் இலக்குவன்.