பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 38 இராமன் - பன்முக நோக்கில் வில்லையும் அம்பையும் சுமக்கின்றேன் என்று தன்னிரக்கம் மேலிட்டுப் புலம்பக் காரணம் என்ன? மனைவியையும், தம்பியையும் அழைத்துக்கொண்டு வரும்பொழுது அவர்கள் இருவரையும் பாதுகாக்கக்கூடிய மாபெரும் தன்மை படைத்த வீரனாகத்தான் இராகவன் புறப்பட்டான். இடையே வந்த முனிவர்கள் புலம்பலைக் கேட்டு அவர்கள் துயர் துடைப்பதாக வாக்கும் அளித்தான். இந்த வினாடி வரை, அதாவது மாயமானின் பின்னே போகின்ற வினாடி வரை, இராகவன் என்ற ஒரு மாபெரும் ஆற்றலை நம்பி, சீதை என்ற பெண்ணும், இலக்குவன் என்ற தம்பியும், முனிவர்கள் என்ற மனிதர்களும் சுற்றி இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே பற்றுக்கோடாக இருந்தவன் தசரதராமனே ஆவான். ஒரு வினாடியில் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டன. தன்னையே நம்பி, தன் பாதுகாவலை நம்பி வனத்திடை வந்த சானகி வேறொருவனால் கவரப்பட்டாள். அண்ணனையும் அவனது பேராற்றலையும் மலைபோல் நம்பியிருந்த இளையவன் அந்த அண்ணனுக்கு மனஅமைதி கூறும் அளவிற்கு வளர்ந்துவிட்டான். இந்த முனிவர் கூட்டங்கள் "ஐயோ என்று அரற்றுவது தவிர வேறொன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஒரு வினாடிக்கு முன்னர் உலகம் முழுவதையும் தன் காலடியில் வைத்திருந்த வீரன் அதனுள் மூழ்கிவிட்டது போன்ற ஒரு நிலை. தன் பழைய நிலையையும், இப்பொழுதைய தன் நிலையையும் சிந்திக்கின்றான் இராகவன். பழைய நிலையிலும் அவன் வில்லும் அம்பும் இருந்தன; இப்பொழுதும் அவை இருக்கின்றன. ஆனால், என்ன வேறுபாடு தாடகையை உரங்கிழித்துச் சென்ற அம்பு இன்னும் தன் தூணியில் இருக்கிறது. கரன்,துரடணன், திரிசிரா ஆகியோரை அவர்களுடைய எண்ணற்ற படைகளோடு சேர்த்துக் கடிகை மூன்றில் விண்ணில் செலுத்திய அம்பும் இன்னும் தன் தூணியில்தான் இருக்கிறது. இந்த அம்புகளின் துணையைக் கொண்டுதான் முனிவர்களின்