பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

帕6 38 இராமன் - பன்முக நோக்கில் இலக்குவன் சொல்லாது விட்ட குறிப்பை நன்கு அறிந்து கொண்டவனாகிய இராகவன் அருமைத் தம்பியை மார்புறப் புல்லி, இருள்வடிவான அவளை நீகொல்லவில்லை என்பதை அறிகின்றேன். அதற்குரிய காரணத்தையும் நான் அறிவேன்' என்று வெளிப்படையாகக் கூறாமல், அருமைத் தம்பியே! நீ மனுவின் மரபில் வந்தவன் என்பதை நிரூபித்து விட்டாய்' என்பதைக் குறிப்பாகவே பேசுகிறான். இதன் வெளிப்படையான பொருள், மனு மரபில் வந்தவர்கள், எந்த நிலையிலும் பெண்களைக் கொல்லமாட்டார்கள் என்பதாம். கவந்தன் நிகழ்ச்சி - சகோதரரிடையே அன்புப் போட்டி அடுத்து வரும் கவந்தன் படலத்தில் தவிர்க்க முடியாத சிக்கல் ஏற்படும் பொழுது இராமன் அதனை எதிர்கொள்ளும் முறையும், இலக்குவன் அதனை எதிர்கொள்ளும் முறையும் நன்கு பேசப்பட்டுள்ளது. கவந்தன் கையில் சிக்கிய சோதரர் இருவரும் பேசுவதை வைத்தே, இருவர் மனநிலையையும் காண முடிகிறது. இராமனது மனத் தளர்ச்சியும், அதன் எதிராகப் பகைவர்களை அழிக்க வேண்டும் என்ற உறுதியும் மாறிமாறி வருதலைக் காண்கின்றோம். கவந்தனிட மிருந்து தப்ப வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்தவுடன் இராமனிடம் இரக்க உணர்ச்சி சில வினாடிகள் மறுபடியும் தலை துக்குகிறது. "தோகையும் பிரிந்தனர் எந்தை துஞ்சினன்; வேக வெம்பழி சுமந்து உழல வேண்டலேன், ஆகலின், யான், இனி, இதனுக்கு ஆமிடம், ஏகுதி ஈண்டு நின்று, இளவலே! என்றான்" . - கம்ப. 3664 கலக்கம் ஒரு சிறிதுமின்றி மனத்திடத்தோடும், தெளிவோடும் உள்ள இளைய பெருமாள், இராமன் கூறுவது தவறு என்பதைப் பல கோணங்களில் எடுத்துக் காட்டுகிறான். "ஐயனே! நாம் புறப்படும் பொழுது என் தாய் இட்ட கட்டளை நினைவில் உள்ளது. புகழுக்குரிய நீங்கள் இருவரும்