தம்பியரும் இராமனும் ேே 20t இல்லை. வேதக் கடலை கரைகண்டவன் இவன் என்பது இவன் சொல்லாலே தோன்றிற்று என்று இராமன் கூறியதன் உட்கருத்தை இலக்குவன் புரிந்துகொள்ளவுமில்லை; புரிந்து கொள்ள முயலவுமில்லை. எதிரே பிரம்மச்சாரி வடிவுடன் நிற்கும் ஒருவனைப் பார்த்துச் சில வினாடி நேரத்தில் அவனை எடையிட்டு, "இவன் உருவத்தைக் கண்டு ஏமாந்து விடவேண்டாம்; இந்த உலகுக்கெல்லாம் ஆணி. இதை ஏதோ முன்பின் யோசியாமல் அவசரப்பட்டுக் கூறினேன் என்று நினைத்துவிடாதே. இவனுடைய பெருமையை நன்கு ஆராய்ந்து தெளிந்து கொண்டேன். இப்பொழுது உனக்கு நான் சொல்வது புரியாவிட்டாலும் பின்னர் நான் சொல்வது எவ்வளவு மெய்ம்மை என்பது தெரியும்" என்று இராகவன் பேசுகின்றான். ஆனால், இலக்குவன் இன்னும் கவனம் செலுத்தவில்லை. ஆகவே, அவனைக் கடிந்துகொள்ளும் முறையில் வில்லார்தோள் இளையவீர! என்று முதற்பாடலில் விளிக்கிறான். வில்லை ஏந்திய தோளை உடைய இளைய வீரனே' என்று கூறுவதன் நோக்கம், வில்லை நம்புவதைவிட அறிவை நம்பவேண்டும் என்ற பொருளில் கூறினான். அதையும் இலக்குவன் சட்டை செய்யாதபொழுது சினம் கொண்ட இராமன் கழறினான் என்று கம்பன் கூறும்பொழுது, வேண்டுமென்றே அந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறான். 'கழறுதல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இடித்துக் கூறுதல் என்று பொருளாகும். தெளிந்த சிந்தையும், கூர்மையான அறிவும் கொண்ட இலக்குவன் இப்பொழுது ஏன் இப்படி நடந்துகொண்டான் என்று சிந்தித்தால், அதற்கும் ஒரு காரணமுண்டு என்பது விளங்கும். மாயமான் நிகழ்ச்சியிலிருந்தும், அதில் பெற்ற அனுபவத்திலிருந்தும் இலக்குவன் கற்றுக்கொண்ட முதல் பாடம், புதிதாக வருகின்ற எவரையும் எளிதில் நம்பிவிடக் கூட்ாது. என்னுடைய அண்ணன் வெள்ளை உள்ளம் உடையவ னாதலால், மாயமானை நம்பியதைப் போல எதிரே இருக்கும் இவனையும் நம்பிவிட்டான் போலும் என்று ஐயுறுகிறான் இலக்குவன். அரக்கர்கள் எந்த வேடமும்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/219
Appearance