உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ே 239 வாலிவதம் முடிந்து சுக்கிரீவனுக்குப் பட்டமும் கட்டிவிட்டான் இராகவன். கார்காலம் முடிந்தவுடன் படைகளுடன் வருகிறேன் என்று கூறிச் சென்ற சுக்கிரீவன் பெருங்குடியனாக மாறி, அனைத்தையும் மறந்து இன்ப விளையாட்டில் இறங்கிவிட்டான். இப்பேருதவி செய்த இராமனையோ அவன்படும் துயரத்தையோ ஒரு சிறிதும் எண்ணாமல் கிட்கிந்தையில் நன்றிமறந்தவனாகக் கிடக்கிறான். அவனிடமிருந்து செய்தி எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த இராகவன் கடுஞ்சினம் கொள்கிறான். இலக்குவனை அழைத்து இராகவன் பேசிய சொற்கள் இலக்குவனையே அதிர்ச்சி அடையச் செய்து விட்டன என்பதில் ஐயமில்லை. இராகவன் பேசிய சொற்கள் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு வெளிவந்தவை என்பது, அச்சொற்களை ஒருமுறை படித்தாலே அறிந்துகொள்ள முடியும். "பெறல் அருந்திருப்பெற்று, உதவிப்பெருந் திறம் நினைந்திலன், சீர்மையின் தீர்ந்தனன்; அறம் மறந்தனன். - கம்ப 4270 "நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து, ஒன்றும் மெய்ம்மை சிதைத்து உரை பொய்த் துளார்க் கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ?" - கம்ப 4271 "நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது வஞ்சம் அன்று." - கம்ப 4273 "வாரலிர் ஆம் எனின், வானரப் பேரும் மாளும்" - கம்ப 4274
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/259
Appearance