பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ேே 253 சார்ந்தோரைக் கொல்லும் நஞ்சு, சிவபிரான் அருளால் வணங்கப்படும் நிலையைப் பெற்றது. தேவியைப் பிரித்த பாவியின் சூழலுக்கு உரியவன் வீடணன்; இராமபிரானால் ஏற்கப்பட்டபோது வீடணன் நிலை உயர்ந்து விட்டது. வீடணனின் வெற்றித் திறத்தை மட்டுமன்றி அடைக்கலத் தத்துவத்தின் சிறப்பையும் இந்த உவமை புலப்படுத்துகிறது. அரக்கர் அழிவு உறுதி அறிவு கண்ட முடிவு இதனை அடுத்து வரும் பாடலில் அரக்கர் வாழ்வு அழியப் போகிறது என்று சொல்கிறான். இது, அவனுடைய ஆழ்ந்த சிந்தனையை அறிவிக்கின்றது. வீடணனின் அறிவு கண்ட இந்த முடிவு இராமனைக் காண்பதற்கு முன்பே சொல்லப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். இராவணன் தம்பியாகிய என்னை இன்னான் என்று அறிந்தி ருந்தும் ஏற்றுக் கொள்ளுகிறான் என்றால் அவனுடைய ஆற்றல் எத்தகையதாக இருக்கும். இராவணனை வெல்வது உறுதி என்ற எண்ணம் இருப்பவன்தானே அவன் தம்பியை சேர்த்துக் கொள்ள முடியும். தருக்கரீதியாக இதனைச் சிந்தித்த அறிவாளியான வீடணன், தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின், செய்யும் அருள் இது ஆயின், கெட்டேன்! பிழைப்பரோ அரக்கர் ஆனோர்? (6488) 'இராமனுடைய தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது என்று வீடணன் எதனைக் குறிப்பிடுகின்றான். பகைவன் தம்பியை ஏற்றுக்கொள்வதால் தன்னுடைய வெற்றிக்கு எவ்வித இடையூறும் நேராது என்று இராமன் முடிவுக்குவந்ததைத்தான் தேற்றம் ஈது என்று சொல்கின்றான். இந்த முடிவுக்கு வந்தவர்கள்கூட இரண்டு வகையில் செயலாற்றலாம். சேர்த்துக் கொள்வதில் தவறில்லை என்று நினைத்தால்கூட இது