பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராட்டியும் இராமனும் ே 29] சூர்ப்பனகை சூழ்ச்சியின் தொடர்ச்சி - மாய மான் அலறல் - இராமன் அம்புபட்டு இறக்கும் தறுவாயில் இருந்த மாரீசன் இராமன் குரலில் அலறி உயிர் விட்டான். இது அரக்கர் சூழ்ச்சி என்பதை அறிந்த இராகவன் பர்ணசாலை நோக்கி விரைவாக நடந்தான். இராமன் குரலில் ஒலம் கேட்டவுடன் பேதைப் பெண்ணான சீதை, பெருந்துயரக் கடலில் மூழ்கிப் புலம்பத் தொடங்கினாள். தான் செய்த பைத்தியக்காரத்தனமான செயலால் பேராபத்து விளைந்து விட்டது என்று மயங்கிய சீதை தன்மேல் வரும் கோபத்தை இலக்குவன்மேல் காட்டுகிறாள். "குற்றம் நீங்கிய குணத்தை உடையவனாகிய இராகவன் வீழவும், கொடிய அரக்கனின் மாயை காரணமாக இறந்துபடுகிறான் என்று அறிந்தும்கூட இன்னும் என்முன்னர் நின்று கொண்டிருக் கின்றாயோ இளையவனே!" என்று ஏசினாள். பிராட்டியின் உடைந்து போன மனத்தை அவள் சொற்களால் அறிந்த இலக்குவன் பேசத் தொடங்குகிறான். "இந்த உலகத்தில் இராமனுக்கு நிகர் என்று சொல்லக் கூடியவர் யாரேனும் உளரோ தங்கள் பெண்மை காரணமாக இவ்வாறு பேசிவிட்டீர்கள்" என்று அவள் உணருமாறு சொல்லத் தொடங்கினான். (3323) "தாயே! பதினான்கு உலகங்களிலும் வீரம் அனைத்தும் சேர்ந்தாலும் தனியே நிற்கும் இராமனை ஒன்றும் செய்ய முடியாது.” (3324) "பஞ்ச பூதங்களும் அவன் முனிந்தால் இடம் பெயர்ந்துவிடும். அக்கமலக்கண்ணனை யார் என்று அறியாமல் இந்த இடரில் தாங்கள் மூழ்குவது சரியோ?” (3325) "கேவலம் இந்த அரக்கர்களால் துன்பமுற்று இராமன் அழைப்பானேயானால், முறையில் இயங்குகின்ற இந்த