பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராட்டியும் இராமனும் 38 305 வீரர்கள் எதிரே கல்லும் பல்லும் கையுமே ஆயுதமாகக் கொண்ட குரங்குகள் என்ன செய்யமுடியும் என்றெல்லாம் நினைத்தவள் அனுமனைக் கண்டபெர்ழுது புதிதாக முளைத்த நம்பிக்கை பொடியாகப்போவதை உணர்கிறாள். அந்த மன உளைச்சலின் பயனாக வெளிவந்தவைதான் மேலே காட்டப்பட்ட பாடல்கள். மேலே உள்ள பாடல்களில் அவள் மன உளைச்சலையும் ஊசலாட்டத்தையும் நம்பிக்கை இழந்தநிலையையும் அறிவிக்கும் பாடல்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வற்றில் இந்த எண்ணுள்ள 1, 2, 4 5, 7, 9 என்பவையாம். இவைபோக எஞ்சியுள்ளவற்றில் 3ஆம் பாடல் (5375) பற்றிச் சிந்திக்க வேண்டும். ஏத்தும் வென்றி இளையவற்கு, ஈது.ஒரு வார்த்தை கூறுதி; "மன் அருளால் எனைக் காத்து இருந்த தனக்கே கடன், இடை கோத்த வெஞ்சிறை வீடு" என்று கூறுவாய். - கம்ப 5375 என்பதே அந்தப் பாடல். என்னைக் காத்திருந்த இளையபெருமாள் இப்பொழுது என்னை மீட்க வேண்டுமெனச் சொல்வது விந்தையானது தான். காவலாய் இருந்ததுடன், தான் அண்ணனிடம் போகாமைக்குரிய காரணத்தை எடுத்துச் சொல்லியும் கேளாமல் இலக்குவனை நோவப் பேசி விரட்டியவள் இதே பெருமாட்டிதான். அப்படியிருக்க, காவல் காத்தவன் காவற் பொருளை இழந்துவிட்டால் அதை மீட்க வேண்டியது அவன் பொறுப்பு என்று சொல்வது ஒடிந்தபோன அவளுடைய மனநிலையைக் குறிக்கிறதே அன்றி அவளது தருக்கம் சரியானதன்று. எனினும், இராகவனை அடைவதற்கு ஏங்கும் ஏக்கம் புலப்படுகின்றது என்பதில் ஐயமில்லை. மற்றொரு பாடலும் நம் சிந்தனைக்கு உரியதாகிறது. அது வருமாறு: அ-20