பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 38 இராமன் - பன்முக நோக்கில் வரம் தந்தவன் இராமபிரான், தேவியைப் பிரிந்தபின் வில்லறம் துறந்தாலும் தன் இல்லற நாயகியை மறக்க முடியவில்லை, முடியாது. வரம் தந்தவன் மாறாக நடவான் என்பதில் ஐயம் தோன்ற இடம் இல்லை. அறத்தின் மூர்த்தியாகிய அவன் மறந்திருப்பானோ துறந்திருப்பானோ என்று அவலப்பட்ட பெண்மை புலம்புகிறது. உற்ற நோய் நோன்றல் என்ற தவஇலக்கணம் பேணினானாயினும், பிரிவெனும் அவலத்தால் நம்பிக்கை தளர்ந்த நிலையில், “மீண்டு ஒரு பிறவி எடுத்துப் பெருமானின் திருமேனி தீண்டும் வரம் கேட்பதாக, அனுமன் வாயிலாகச் சொல்லியனுப்பினாள். அரக்கர் குலம் வேரறுத்துப் பிராட்டியை மீட்ட பெருமான் அற்புதம் செறிந்த மாய நாடகம் ஆடுவானாகிப் பிராட்டியை நெருப்புச் சோதனைக்கு ஆளாக்கினான். நெருப்பு இறைவனையே சீதையின் கற்புத் தீச் சுட்டது. ஆயினும் சீதையின் மனத்திலிருந்த குற்ற மனப் பான்மையை ஒழிப்பதற்கு ஆடிய மாய நாடகத்தால் மாசறு பொன்னாக அவளை மற்றி இராமன் அயோத்தி வருகிறான். அங்கு வந்தபின் பிரிந்தவர் கூடினால் பேசலும் வேண்டுமோ என்றபடி நாளும் கரை தெரிவிலாத போகக் கடலினுள் நிலைத்தான். (இது வேறு போகம்) பிணைத்தாலும் பிரியாதவர்கள்; பிரிந்தாலும் பிரியாதவர்கள் - பிராட்டியும் இராமனும்.