பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுமனும் இராமனும் ே 34; இராமன் புகழ் சாயாமல் இருக்க உதவியது மாருதியின் வார்த்தைகள். அந்த வார்த்தைகளை முழுவதுமாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான் இராகவன் என்பதை, 'செவிமடுத்து', 'இனிதுமாந்தி’ என்ற சொற்களால் குறிக்கின்றான் கவிஞன். இராமனே அனுமனைப் பேரறிவாள என்று அழைக்கின்றான் என்றால், அனுமனின் ஆற்றலை என்னென்று கூறுவது! சேர்க்க வேண்டாம் என்று கூறியவர்களைப் பார்த்து, சீரிது இம்மாற்றம்’ என்று சொல்வதோடு தெளிவு தேர்மின்' என்றுக் கூறுகிறான். அத்துடன் நிறுத்தவில்லை. உணர்ச்சிவசப்பட்டுக் குழப்பம் அடையாமல் தெளிந்த சிந்தையோடு ஆராய்ந்து பார்த்தால், மாருதி சொன்னது சரி என்ற கருத்தில் தெளிவுறத் தேர்மின்’ என்றான். இதற்கு மேலும் ஒருபடி சென்று அவர்களைப் பார்த்து, இனிமேலும் இதுபற்றிப் பேச வேண்டிய தேவையில்லை. மாருதி ஆராய்ந்து சொன்ன முடிவே சிறந்ததாகும் என்ற கருத்தில், மற்றினி உரைப்பது என்னோ? மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி என்று கூறினான். மாருதி வடித்துச் சொன்ன என்று இராமன் கூறுவதற்குக் காரணம் பதினெட்டு பாடல்களில் அறிவின் துணைகொண்டு ஆய்ந்து பல்வேறு வாதப் பிரதிவாதங்களையும் நிகழ்த்தி, வீடணன் வந்த நேரமும், சந்தர்ப்பமும் மிகச் சரியானவையே என்பதையும் நிறுவினான் அனுமன். அவனுடைய வாதங்களுக்குமேல் மறுத்துச் சொல்லக்கூடிய வாதம் எதுவும் இல்லாத முறையில் ஆணித்தரமாகவும், தருக்கரீதியாகவும் வீடணனை ஏற்றுக் கொள்வதே சிறந்தது என்று நிறுவிய அவன் மேலும் ஒருபடி சென்று ஒன்றைக் கூறலானான். . அவ்வாறு கூறியதில் ஒரு வியப்பு என்னவென்றால், அடைக்கலம் தருவதையே தன் பணியாகக் கொண்ட இராகவனிடமே இவனுக்கு அடைக்கலம் தருவது சிறந்தது; நீ அவ்வாறு தராவிட்டால் பிறர் நகைப்பிற்கு இடமாகும்’ என்றும் சொல்லும் நெஞ்சுரம் அனுமன் ஒருவனுக்கே உண்டு.