பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. முனிவர்களும் இராமனும் முனிவர்கள் இருவர் கம்பராமனுடன் தொடர்பு கொண்டிருந்த முனிவர்கள் மிகப் பலர் ஆவர். இவர்களுள் நேரிடையாக இராமனோடு அதிகத் தொடர்பு கொண்டவர்கள் விசுவாமித்திரன், வசிட்டன், அகத்தியன், பரத்துவாகன் ஆகியோர் ஆவர். இவர்களுள் இராமன் மிக இளையவனாக இருக்கும்பொழுதே விசுவாமித்திரன் பார்வையின் கீழ் ஏற்கப்பட்டு, அவன் திருமணம் முடியும்வரை அந்த முனிபுங்கவனின் அணைப்பின் கீழ் இருந்துவந்தான். வசிட்டனைப் பொறுத்தமட்டில் இரகு வம்சத்திற்கே குலகுரு ஆதலால், இராமனுடைய கல்வி, கேள்வி, ஏனைய பயிற்சிகள் ஆகியவற்றைத் தந்தவன் வசிட்டனே ஆவான். கதைப் போக்கையும், வசிட்டன், விசுவாமித்திரன் ஆகியோர் செய்த பணிகளையும் சிந்தித்தால், இராமனாகப் பிறந்தவன் யார், அவன் எதற்காகப் பிறந்தான், அவன் பிறந்த குறிக்கோளை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும் என்பவற்றையெல்லாம் மிக நன்றாக அறிந்து திட்டமிட்டுப் பணிசெய்ததாகவே தெரிகின்றது. விசுவாமித்திரன், வசிட்டன் இணைந்து செய்தது வசிட்டன் கற்பித்த கல்வி முறையில் பழமையின் வாசனை அதிகமாக இருந்தது. பெரிதாக உலகம் வளர்ந்து விட்ட நிலையில் சில சட்டதிட்டங்களை மாற்றி அமைக்கவும், பழைய சட்டங்கட்குப் புது முறையில் பொருள் செய்யும் தேவை மிகுதியாகி விட்டது. மனித சமுதாயத்தோடு அதிக நெருக்கம் இல்லாமல் தவ வாழ்க்கை மேற்கொண்டு தேவையான பொழுது தசரதனுக்கு வேண்டிய