பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 38 இராமன் - பன்முக நோக்கில் அதனைப் பயன்படுத்த முடியும்? இறைவனின் கருணை கடல்போல் இருப்பினும் நான் என் கொள்கலத்தின் அளவுதானே அதில் முகந்து கொண்டு வரமுடிகிறது. (கீதாஞ்சலி - ) என்று தாகூரும் கூறுகிறார். எனவே அவன் மானுடச் சட்டை தாங்கி வருவது உயிர்கள் மாட்டுக் கொண்ட கருணையினாலேயே ஆகும். அப்படிக் கருணையினால் வருகிறவன் ஏன் ஒரு சிலரைக் கொல்ல வேண்டும்? ஏன் ஒரு சிலரைக் காக்க வேண்டும்? தண்டிப்பதும், கொல்வதும் இறைவன் அவர்கள்மாட்டுக் கொண்ட மறக்கருணையினால்தான். அது சரி, கொல்லவும் வேண்டுமா?’ என்ற வினா அடுத்து வரும், ஆத்மாக்கள் என்றும் அழிவதில்லை. எனவே இருப்பதும் இறப்பதும் உடலே தவிர ஆத்மா அன்று. இதுபற்றிக் கூறவந்த கீதாசார்யன், வாலாம்ஸிTர்ணாணி யதா விஹாய நவாணி க்ருஷ்ணாதி நரோபராணி ததா சரீராணி விஹாய ஜீரினான்யன் யானி ஸம்யாதி நவாணி தேஹி அத்தியாயம் 2 - 22 (பழுது பட்ட துணிகளைக் களைந்துவிட்டுப் புதியனவற்றை மனிதன் அணிவதுபோல, ஆத்மா பழைய உடலங்களை நீத்துவிட்டுப் புதிய உடலங்களில் புகுந்துவிடுகிறது) என்று கூறுகிறான். சில உடம்பினுள் இருக்கும் சில ஆத்மாக்கள், வேறு வழியில் திருத்தப்பட முடியாத நிலையை அடைந்துவிட்டால், அந்த உடல்களை அழித்துத்தான் அந்த ஆத்மாக்களை முன்னேற்ற முடியும். அதிலும் இறைவன் கருனைதான் வெளிப்படுகிறது. காரணம் விருப்பு வெறுப்பு என்ற இரட்டைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டவன் பரம்பொருள். அவனைப் பொறுத்தமட்டில் இராவணன், இந்திரசித்து, வீடணன், கும்பகருணன், குகன், சுக்கிரீவன், ஏன்? அனுமன் உள்பட அனைவரும் ஒன்றுதான். சிலர்மாட்டு அன்பும், சிலர்மாட்டு வெறுப்பும், அவனிடம் இல்லை.