பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 38 இராமன் - பன்முக நோக்கில் பரம்பொருளைப் பற்றிக் கூறவேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. எனவே, இராமன் மும்மூர்த்திகட்கும் மேம்பட்ட பரம்பொருளே என்பதை நிறுவினான். கவிதைச் சிறப்பில் ஈடுபட்டவர்கள், ஒப்பற்ற காப்பியம் என்பதற்காக ஈடுபட்டவர்கள் என்று இப்படிப் பல தரத்தவர்களும் அவனுடைய இராமாயணத்தைப் படிப்பர். நாளடையில் அவன் அக்காப்பியத்துள் பொதிந்துவைத்துள்ள அறமும் நீதியும் மெள்ளமெள்ள மக்கட் மனத்துட் பதியும்; இராம அவதாரத்தில் பரம்பொருள் நுட்பம் விளங்குவதையும் மனங்கொள்வர். 'இராமாவதாரம்' என்று தன் காப்பியத்துக்குப் பெயரிட்ட நுட்பம் இதுவே. அதன் பயனாக இத் தமிழச்சாதி உயர்ந்து முன்னேறும் என்று கம்பன் கண்ட கனவே, இக் காப்பியத்தை அவன் இயற்றக் காரணமாய் அமைந்தது எனலாம். ※※B乐※