பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இராமர் செய்த கோயில் ஆசாரிகளையும் பொற்கொல்லர் களையும் கொண்டு செய்வத்து உள்ளனர் மூன்றாவதாக ஆண்டுக்கொருமுறையும் வாரத்தில் ஒரு நாளும் சுவாமியும் அம்பாளும் திருக்கோயிலின் நான்குபுற விதிகளிலும் பவனி வருவதற்காக மரத்தினாலான பெரிய தேரினையும் வெள்ளியிலான சிறிய தேரினையும் செய்வித்து அளித்துள்ளனர். 大 大大大 மேலும் விழாக்கா லங்களில் இரவு நேரங்களில் திருக்கோயிலினை அடுத்த பரந்த வெளிகளில் இராமாயணம் கூத்தும் இராமாயனக் கதையை எளிதாக மக்களுக்கு உணர்த்தும் வகையில் எளிய இனிய ஒயில் ஆட்டக்காரர்களின் ஆடலும் நடைபெற்று வந்தன. இத்தகைய தெய்வத் தொண்டுகளைச் செய்த சேதுபதிகளின் மரபினரைக் காலமெல்லாம் மக்கள் நினைவில் கொள்வர் என்பதில் ஐயமில்லை. இந்தத் திருக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்கள் பற்றிய பட்டியலும் வாகனங்கள் பற்றிய பட்டியலும் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. 4) வாகனங்கள் திருக்கோயிலில் கிழ்வரும் வாகனங்கள் உள்ளன. 1. கைலாசவாகனம் 2. கமலவாகனம் 3. ஹம்சவாகனம் 4. கருட வாகனம் 5. நந்திகேசுவரர் வாகனம் 6. பூதவாகனம் 7. காமதேனு வாகனம் 8. சுவாமி கேடகம்