பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் QQ செய்வித்தல். பக்தர்களுக்கு கோடி திர்த்தம் வழங்குதல் ஆகியன இந்தப் பணிகளுக்காக அவர்களுக்கு நாளொன்றிற்கு பிரசாதம் இருபத்து நான்கு தளிகைச் சாற்றுக் கட்டளை உபயோகத்தில் தலைக்கு ஒரு தளிகைப் பிரசாதமும், இதரப் பணிகளுக்கு மாதம் பதினைந்து பனமும் வழங்கப்பட்டு வந்தது. மற்றுமொரு வகையினரான தமிழகப் பிராமணர்கள் பூஜைக்குச் சந்தனம் அரைத்துக் கொடுத்தல். திருவிளக்கு பார்த்தல், தளிகை மாற்றல், பல்லக்கு எழுந்தருளப் பண்ணுதல். உற்சவத்திற்குத் தேடகத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்தல். கட்டியம். அடப்பம், காளாஞ்சி. பெரிய மனிதருக்குப் பிரசாதம் கொடுத்தல். கோடி திர்த்தம் வழங்குதல் ஆகிய பணிகள் இந்த தமிழ்ப் பிராமண மகாஜனங்களது பணிகளாக இருந்தன. இவர்களுக்குப் பிரசாதமும், பனமும் கொடுக்கப் பட்டன எனினும் முழுமையான விபரம் கிடைக்கப்பெற வில்லை. இந்த இருவகைப் பணியாளர்களது பணியினைக் கண்காணிக்கும் பொறுப்புடன், அன்றாடம் நடைபெற உள்ள கட்டளைகள். சந்தி. உற்சவம் ஆகியவைகளையும் கண்காணித்துச் சிறப்பாக நிறைவேற்றும் பொறுப்பும் இராமநாதபண்டாரத்தின் கடமையாக இருந்து வந்தது. மேலும் இராமேசுவரம் திருக்கோயிலுக்கு மின்வசதி இல்லாத முந்தைய காலத்தில் இரவிலும் பகலிலும் ஒளிதருவதற்கென்றே பலவகை விளக்குகள் இருந்தன (1) வெங்கல விளக்கு (2) கட்டுத் தம்புவிளக்கு (3) தட்டு விளக்கு (4) நிலை விளக்கு (5) கம்ப விளக்கு (6) சிறுவிளக்கு (7) து க்குவிளக்கு என்ற பல வகையான விளக்குகளுக்குத் தேவையான எண்ணெய் இராமேசுவரம் கோயிலில் மொத்தமாகக் கொண்டு வந்து கொடுக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் இந்த விளக்குகளை ஆண்டுக்கு