பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|(}() இராமர் செய்த கோயில் செய்தும், திருக்கோயிலில் இருந்த செப்பேடுகளிலும் கல்வெட்டுக்களிலும் அவற்றிற்கு ஏற்றாற்போல திருத்தங்களும் செய்தார் கி.பி. 1832-ல் கோயிலில் நிர்வாகம் முறையாக நடைபெற வில்லை. பொறுப்பிலிருந்த சேது இராமநாத பண்டாரம் கோயில் பணத்தைக்கையாடல் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டது. இதனை அறிந்த கும்பெனி நிர்வாகம் கோயில் நிர்வாகத்தைச் சேது இராமநாத பண்டாரத்திடமிருந்து பறித்து இராமநாதபுரம் வட்டாட்சியரிடமும் உதவி ஆட்சியரிடமும் ஒப்படைத்தது கி.பி.1835ல் கோயில் நிர்வாகம் மீண்டும் பண்டாரத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் கோயில் சொத்துக்களைக் கையாடல் செய்ததுக்கு எவ்வித பரிகாரமும் ஏற்படவில்லை. தொடர்ந்து இராமநாதபுரம் ஜமீன்தார் பண்டாரத்தின் நியமனம் பற்றிப் பல ஆட்சேபனைகள் செய்த பிறகு இராமநாதபுரம் மன்னருக்கும் பண்டாரத்திற்குமிடையே உடன்பாடு ஏற்பட்டது. என்றாலும் கி.பி. 1837 இல் இராமேஸ்வரம் கோயில் விழா சம்பந்தமான ஊர்வலத்தில் சென்ற பக்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அதற்குக் காரனமான இராமநாத ш Googт гт гт Lib தண்டிக்கப்பட்டார். கி.பி. 1854ல் பண்டார மும் மரணமுற்றார். அவர் இறப்பதற்கு முன்னர் தன் வாரிசாக சொக்கலிங்கம் பிள்ளை என்பவரை நியமித்தார். இவர் கி.பி. 1857இல் இறக்கும் போது சிதம்பரம் பிள்ளையை நியமித்தார். இவரை அடுத்து பண்டாரம் பதவியை ஏற்ற பெரியநாயகம் பிள்ளை. அவரைவிட இன்னும் ஒரு படிமேலே சென்று இவர் தனது பெயரை கி.பி. 1854-க்குப் பிறகு கோயில் சுவரிலும் கொடிமரத்திலும் செதுக்கி வைத்தார் இவைகளினால் வரலாற்றைப் பொய்ப்பித்து விடலாம் என்பது அவர் கண்ட கனவு.