பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கி.பி. 1552 2, 4 լՈ, 1628 3. ፴,t f}, 1640 2) இராமேஸ்வரம் பற்றிய வரலாற்றுச் செய்திகள் போர்ச்சுக்கல் நாட்டு பாதிரியாரான பிரான்சிஸ் சேவியர் என்பவர் இராமேஸ்வரம் கரையூர், வேர்க்கோடு பகுதிகளில் வாழ்ந்து வந்த கிறிஸ்த்துவ மதத்தை தழுவிய மீனவர்களுக்காக தேவாலயம் ஒன்றை கரையூர் கடற்கரைப் பகுதியில் அமைத்தார். இராமேஸ்வரத்திற்கு வருகை தந்த இராமநாத புரம் மன்னர் கூத்தன் சேதுபதி கோயில் யானை மீது அமர்ந்து நகர்வலம் வந்தபொழுது தமது வலிமையை நிருபித்துக் காட்ட மன்னர் அமர்ந்து இருந்த யானையின் வாலைப் பிடித்து யானை மேலும் நகரவிடாமல் நிறுத்திவிட்டார் முத்துவிஜயன் சேர்வை என்பவர். அன்பளிப்புக் -கள் வழங்கி அவரைப் பாராட்டிய சேது மன்னர் அவருக்கு நாள் தோறும் திருக்கோயி -லில் இருந்து உணவு வழங்க 08.06.1827-ல் செப்பேடு வழங்கி உத்திரவிட்டார். (சென்னை அருட்காட்சியகத்தில் இந்த செப்பேடு உள்ளது) நமது நாட்டின் நிலப்பரப்பை இராமேசுவரம் திவுடன் இணைப்பதற்காக முதன் முறையாக மண்டபம் தோணித்துறைப் பகுதியையும் பாம்பன் திவின் தெற்குப் பகுதியையும் இனைப்பதற்காக சுமார் 2 கல் தொலைவு நீளத்தில் கடலில் மேலாக பாலம் ஒன்றினை திருமலை நாயக்கரது தளபதி இராமப்பையன்