பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 2 || உறுதி அந்தச் சிந்தனைகளின் வழி நாமும் நமது எதிர்காலச் சந்ததியும் நமது முன்னோர்களது ஆன்மீகக் கலை இலக்கியத் தொண்டுகளை நினைவு கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவோமாக. நெஞ்சம் மறப்பதில்லை...... இராமேஸ்வரம் திருக்கோயில் பற்றிய இந்த நூலினைத் தொகுப்பதற்கு ஆர்வமூட்டிய அன்பர்கள் அனைவருக்கும் மற்றும் இந்த நூலின் மூலப்படியினை மெய்ப்புடன் ஒப்பிட்டுப் பொறுமையுடன் திருத்தங்கள் செய்து கொடுத்த தமிழ்ப் பேராசிரியர் திரு.மை. அப்துல்சலாம் அவர்களுக்கும் இந்த நூலின் அச்சுப் பணியினைக் கண்காணித்து உதவிய முருகாலயம் திரு. முத்துசுவாமி அவர்களுக்கும் எனது நெஞ்சத் தடத்தில் இருத்தி மகிழ்கிறேன். - ஆசிரியர்