பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 83 இப்பொழுது அந்தப் புஜை வழிபாடுகளின் விபரங்களைப் பார்ப்போம். 1) வாரவிழா ஒவ்வொரு வெள்ளிக் கிழமை இரவு மணி 8.00 முதல் 9.00 மணிக்குள் பூரீ பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப் பல்லக்கில் அமர்ந்து திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உலாவரும் விழா நடைபெறுகிறது. 2) பட்சவிழா பூரீ அம்பாளைப் போன்று பூரீ இராமநாத சுவாமியும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பிரதோஷ நாளன்று மாலை 5.00 - 6.00 மணிக்குள் ரிஷபவாகனத்தில் அமர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் உலாவருதல். 3) மாதவிழா ஒவ்வொரு மாதமும் மாதக் கார்த்திகையன்று இரவு 8.00 மணிக்கு பூரீ சுப்பிரமணியர் வெள்ளிமயில் வாகனத்தில் திருக்கோவிலில் நான்கு ரதவீதிகளிலும் பவனி வருதல். தை மாதம் மகர சங்கராந்தி நாள். தமிழ் வருடப் பிறப்பு நாள். கார்த்திகை மாதம் கார்த்திகை நாள். தை மாதம் பெளர்ணமி நாள் (தெப்பத் திருவிழா) ஆகிய புனித நாட்களில், சுவாமியும் அம்பாளும் தங்க ரிஷபவாகனத்தில் பஞ்சமூர்த்திகள் தொடர திருக்காட்சி கொடுத்தல். 4) ஆண்டு விழா இராமேசுவரம் திருக்கோயில் விழாக்களில் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. மாசி மாத நவராத்திரி விழாவாகும். மாசி மாதம் கிருஷ்ண பட்சம் தொடங்கி அம்மாவாசையன்று இந்த விழா முடிவடைகிறது. ஆங்கில