பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

※ 178 球 இராமலிங்க அடிகள் கூசும் படிவரு மேஎன்செய் கேன்என் குலதெய்வமே (9) அனைத்தும் அருமையான பாடல்கள்; படிப்போர் உள்ளத்தை உருக்கிக் கரையச் செய்பவை. அங்ங்னம் நாம் அநுபவித்தால் வள்ளல் பெருமான் இரங்குவது போல் நாமும் இரங்கலாம். 8. சிந்தைத் திருப்பதிகம்; கொச்சகக் கலிப்பாவா லான பத்துப் பாடல்களைக் கொண்டது இப்பதிகம். தம்முடைய குறைகளையெல்லாம் கருதாமல், தாம் அவரையே கதி என்று கொண்டிருப்பதையே கொண்டு ஆட்கொள்ளுமாறு அழுது வேண்டுவனவாக அமைந் தவை இப்பாடல்கள். கற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும் உற்றேநின் தன்னை நினைந் தோதுகின்றேன் அல்லாமே மற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்த் துள்குளிரச் சற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ (2) கள்ளநெறி கொள்ளும் கடைநாயேன் என்னினும்நின் வள்ளல் மலர்த்தாளே வழுத்துகின்றேன் என்னுடைய உள்ள மெலிவோ டுடல்மெலிவும் கண்டும்.அந்தோ எள்ளளவும் எந்தாய் இரங்கா திருந்தனையே (4) வெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய உள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும் தள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே கள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே (7) குற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும் உற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லை.என்றே நற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன் கற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே (9)