பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笨 296 等 இராமலிங்க அடிகள் பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப் புத்தமு தருத்தினன் உளத்தே அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த அருட்பெருஞ் சோதிஎன் அரசே (8) இந்த நான்கு பாடல்களும் அருட்பெருஞ்சோதி” இன்னதென்பதைச் சுட்டி விளக்குவன. 85. சிவானந்தத் தழுந்தல்: இப்பதிகம் பத்துப் பாடல் கள் கொண்டது. அனைத்தும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. அடிகள் தாம் சிவானந்தத்தில் அழுந்திய நிலையை அற்புதமாய் விளக் குவன. பாடல்கள் யாவும் அருட்பெருஞ் சோதி என் ஆண்டவா நீரே என்று இறுவன. காரண காரியக் கல்விகள் எல்லாம் கற்பித்தென் னுள்ளே கலந்துகொண் டென்னை நாரனர் நான்முகர் போற்றமேல் ஏற்றி நாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப் பூரணமாம் இன்பம் பொங்கித் ததும்பப் புத்தமு தாம்அருட் போனகம் தந்தே ஆரன வீதியில் ஆடல்செய் திரே அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவர் நீரே (1) சிற்சபை இன்பத் திருநடங் காட்டித் தெள்ளமு தூட்டிஎன் சிந்தையைத் தேற்றிப் பொற்சபை தன்னில் பொருந்திஎல் லாம்செய் பூரண சித்திமெய்ப் போகமும் தந்தே தற்பர மாம்ஒர் சதானந்த நாட்டில் சத்தியன் ஆக்கிஓர் சுத்தசித் தாந்த அற்புத வீதியில் ஆடல்செய் திரே - அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவர் நீரே (4)