பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

崇 326 缀 இராமலிங்க அடிகள் தனித்தலைவர் வருகின்ற தருணம்.இது தோழி தனிக்கஎனை விடுநீயும் இனித்தொருபால் இருத்தி இனித்தசுவைத் திரள்கலந்த திருவார்த்தை நீயும் இன்புறக்கேட் டுளங்களிப்பாய் இதுசாலும் நினக்கே மனித்தர்களே வானவரோ மலரயனோ மாலோ மற்றையரோ என்புகல்வேன் மகேசுரர்ஆ தியரும் தனித்தஒரு திருவார்த்தை கேட்பதற்கே கோடித் தவஞ்செய்து நிற்கின்றார் தவஞ்செய்த நிலத்தே (18) தலைவி தோழிக்குச் சொல்வதுபோல் அமைந்துள் ளது. தனக்கும் தலைவருக்கும் இடையே நடைபெறும் 'திருவார்த்தையை அவள் கேட்டாலும் போதும்; ஆனால், வானவர் முதலியோர் இந்தத் திருவார்த்தை யைச் செவிமடுக்க கோடித்தவம் செய்து நிற்கின்றனர் என்றும் கோடிட்டுக் காட்டுகின்றார். இங்கு தலைவி நிலையில் இருப்பது அடிகளே. திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார் சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார் உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துனைவர் அவர்தம் பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர் பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன் துருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும் சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதேன் தோழி (34)