132 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் 'குரங்கு நகரைச் சுட்டது; சுற்றமும் நண்பரும் இறந்தனர்; பழி பரந்தது; இவ்வளவுக்கும் என்னுடல் இவ்வரியணையில் இருந்ததே! - இராவணன் தன் உயிரை இங்குக் குறிப்பிடாதது கவனிக்கத்தக்கது. அஃது அவமானத்திற்கஞ்சி இறந்தொழிந்தது என்பது அவன் எண்ணம்போலும்! பழிக்குப் பயப்படும் இராவணன், அடுத்து, 'அனுமன் இறந்தொழிந்தான் என்று கேட்கும் பாக்கியத்தையும் பெறவில்லையே! என்று ஏங்குகின்றான். உயிருடனிருக்கும் குரங்கு, புதுப்பித்த இலங்கையையும் அழித்துவிடும் அன்றேயே அதன் செயல்களைத் தடுக்கும் திறம் தனக்கில்லை என்பதை இன்னும் தெளிவாக அவன் உரைக்க முடியுமா? அவன் கயிலையை எடுக்கத் துணிந்த காலத்து இருந்த தைரியம் எங்குச் சென்றது ? இராவணன், பழி வந்ததற்குத் தன் செயலே காரணம் என உணர்ந்ததே, இங்கு அவன் தைரியமற்றவனாய் இருப்பதற்குக் காரணம். எத்துணை வல்லமை யுடையவனேயானாலும், தானே வருவித்துக் கொண்ட இன்னல்களை எதிர்க்கும் சக்தியை அவன் எப்படிப் பெற்றிருக்கக் கூடும்? இவன் இராவணன் தானா!' என்று நாம் ஐயப்படும்படி அவன் நடந்து கொள்வதிலிருந்தே குரங்கு செய்த இன்னல்களின் எல்லையை ஒருவாறு உணரமுடிகிறது. இராவணனையே அதை விவரிக்கச் சொல்லுவோம். ஊறுகின் றனகிணறு உதிரம்; ஒண்நகர் ஆறுகின் றிலதழல் அகிலும் நாவியும் கூறுமங் கையர்நறுங் கூந்த லின்சுறு நாறுகின்றது.நுகர்ந்து இருந்தம் நாமெலாம் (கம்பன் - 6083)
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/149
Appearance