இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் காப்பியம் தமிழ் மொழியே மூன்றாகப் பகுக்கப்பட்டு இயல், இசை, நாடகம் என்று வழங்குவதை யாவரும் அறிவர். விரிந்த பல தொகுப்புகளைத் தன்பால் கொண்டு இலங்குவது இயல் பகுதி. பெருங் காப்பியங்கள் என்று இடைக் காலத்தில் எழுந்த அனைத்து நூல்களும் இத்தொகுப்பினுள்ளேயே அடங்கும். சிலப்பதிகாரம் நாடக நூலாகக் கருதப்படினும், அதனுள் இம் மூன்று பிரிவுகளும் இடம் பெறினும், பொதுவாக நோக்குமிடத்து, அதுவும் இயற் பகுதியிலேயே அடங்கும். பெருங் காப்பியத்திற்குரிய இலக்கணங்கள் யாவும் அமையப்பெற்று ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கம்பராமாயணமும் முற்கூறிய இயற்பகுதியிலேயே அமையும். ஈண்டுப் பெருங்காப்பியம் என்ற சொல்லைச் சில மாறுபாடு களோடு கூட்டி ஆங்கிலத்தில் உள்ள "எபிக் (Epic) என்ற சொல்லின் நேர் பொருளுடையதாக வழங்கலாம். இப்பெருங் காப்பியங்கள் எல்லாம், உலகின் எப்பகுதியில், எம்மொழியில் தோன்றினும், அவை ஒரு சிறந்த உட்கோளோடு திகழ்தலைக் காணலாம். அவை பழைய சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு தோன்றுகின்றன. அவற்றில் குறிக்கப்படும் பொருள்,
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/20
Appearance