54 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் நிற்பது; ஒவியம் அனைய என்று ஆசிரியன் கூறுமிடத்து, ‘கற்பனையால் வரித்துக் கொள்ளப்பட்ட அழகெலாம் திரண்டு உருவு கொண்டதை ஒத்தவர்' என்றே பொருள் கொள்ள வேண்டும். எனவே, இவ்வளவு அழகுடைய மகளிர் - தவஞ்செய்த தவமே போன்று வாழும் மகளிர் - வாழ்க்கை முறை எது என்பதையும், பொழுதைக் கழிக்கும் முறை எது என்பதையும் ஒருவாறு கண்டோம். இத்தகைய வாழ்க் கையை மகளிர் நடத்தினரென்றால், அது மன்னவன் சிறப்பாலேயே நடைபெற்றிருக்க முடியும். அச்சம் என்பது ஒரு சிறிதும் இல்லாது செல்வம் கொழிக்கும் நாட்டிலேயே இஃது இயலும். அம்மட்டோ? இவை இரண்டுமிருந்துங்கூடக் கலையறிவு இல்லை என்றால், அங்கு இசைக்கும் நடனத்திற்கும் இடமேது? எனவே, இலங்கை மகளிர் கலைச் செல்வம் பெற்றுத் திகழ்ந்தன ரென்பது ஒருதலை. இங்ங்னம் அவர்கள் வாழ வழி செய்தவன் இராவணனே அல்லவா? இலங்கை முழுதும் சுற்றித் திரிந்து, அவர்கள் வாழ்க்கையை அவர்கள் தன்னைக் காணாத வகையில் கண்ட வனாகிய அனுமன், தன் கருத்தைத் தெரிவிக்கின்றான். அவர்கள் தன்னைக் காணாத வகை வடிவங் கொண்டு அவன் சென்றான் என்று கூறுகிறான் கம்பன். அங்ங்னம் கூறவேண்டிய இன்றியமையாமையும் உண்டு. இன்றும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டினைக் காண அரசரோ, அல்லது அவர் அருள் பெற்றவரோ செல்வராயின், அவர் செல்லும் நாட்டில் எல்லாவற்றையும் காண இயலாது. அந்நாட்டின் விரும்பத்தகாத பகுதிகளெல்லாம் மறைக்கப்பட்டு, விரும்பத் தகுந்தனவும் காண்டற்குரியனவும் ஆகிய பகுதிகளே காட்டப்படும். இரஷ்யா தேசத்தைக்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/73
Appearance