48. கொய்வார்சினை வேங்கை குலைகுலையாய்ப்
பெய்வார்குழன் மீது பிறங்கிடவே
கைவாய் மலர்ந்த கருங்குவளை
மைவாரிய கண்மலர் வாய்பொதிவார்.
47. விரைமேவிய சந்தன மெல்லிணரை
வரையாடு மடுத்திட வாய்தருவார்
விரலோடு பொருத்தியே மென்முகையைப்
புரையாதொ ழி காந்தள் புறத்திடுவார்.
48. மையாடு மலைக்குற மாதரொடு
கையோடுகை மாறி வரிக்கயலை
வையாகிய வேல்விழி யாலடுவார்
துய்யாவென வாடுவர் தும்பிலியே.
49. சந்தோடு ததைந்த தடம்பொழிலிற்
பந்தாடி மகிழ்ந்திடு பைங்கிளியார்
கொந்தோடு குளிர்ந்திடு வேங்கையிடை
வந்தாடுவர் குன்ற வரிக்குரவை,
50. மஞ்சள்ளிய மாதவி நீழலிடை
நெஞ்சள்ளிய நீடிசை பாடியடு
நஞ்சள்ளிய வேல்விழி நன்னுதறே
னஞ்சொல்லியர் கும்மி யடித்திடுவர்.
51, மலையுஞ்சொல வண்டமிழ் பாடிமணிக்
கலாமிஞ்சு சிலம்பு கறங்கிடவே
பொலமஞ்சிறை பைங்கிளி பூவைமயிற்
குலமஞ்ச வடிக்குவர் கோலாட்டம்,
47. இணர்-பூங்கெ ச த் து. காந்தள் மு ைகயைப்புறத்
திடுவார்.
49. த ைதந்த-நெருங்கிய, கொந்து-கொத்து. வரி.
பாட்டு,
80. மஞ்க - முகில். மாதவி - குருக்கத்தி. கன்னுதல்
- தேன்அம் சொல்லியர்.
51. கறங்குதல்-ஒலித்தல்.
பக்கம்:இராவண காவியம்.pdf/137
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
