பக்கம்:இராவண காவியம்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


188 தண்டமி முகத்தை முற்றுந் தனிக்குடை நிழலிற் காவல் கொண்டரின் பெருமைக் கேற்ற குணமுமொத் திருத்தல் யாருக் குண்டுநின் றலைமைக் கேற்ற வொப்பிலா வெங்கள் மன்னன் பெண்டினைக் காதல் கொண்ட பெருமையே பெருமை யென்றார். 61. பெருமையீ தொன்று மில்லைப் பிரிவுவேற் றுமைய தின்றி ஒருமையாய் நன்னீர் போல வுயர்ந்த செந் தமிழின் காதல் பெருமையுஞ் சிறுமை யென்னும் பிரிவிலா தாண்பெண் ணுள்ளத் தொருமையே, தமிழ ரெல்லாம் மொருகுலைக் காய்க ளன்றோ ? 62. ஒருவனு மொருத்தி யுங்கண் டுருவொடு பிறவு மொப்பின் இருவரி னுள்ளத் தேநின் றெழுதரு முண்மைக் காதல் பருகிய கண்க ளுடு பாய்ந்துளந் தம்மை யாத்தே இருமையை யொருமை யாக்கும் யாங்களு மவ்லா றானோம். 63. ஆதலி னெனக்கு முன்ன ரமைச்சரே யுங்கள் மன்னன் காதலின் சிறப்பி னோடு கடமையு மறிந்து மேலோர் ஓதிய படியே யென் பா லுங்களை விடுத்தா னீ தில், பேதைமை யின்று; பெண்ணைப் பெற்றவர் கட..ன தாமே. 64. என்றுமே யினைய கூறி யெனக்குரி யாளை யெற்கே மன்றல்செய் திடவி சைந்த மன்னற்கென் வணக்கங்கூறி நின்றது புரிவீ ரென் று நெடியனு மவரோ டுண்டே அன்றிலி னியற்கை யானா ன மைச்சருந் தொழுது போனார். 62. யாத்தல் - கட்டுதல். ஒப்புமையை - மெய் - 26-ல் காண்க. 64. கின் றது - இனி ஆகவேண்டிய து. அன்றிலின் இயற்கை-பிரிவாற்றாமை. அன்றில் இணை பிரியாத காதலன்பு டைய ஒரு பறவை,