பக்கம்:இராவண காவியம்.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


189 28. ஆடவ ரரியி னார்ப்பர் யானை க ளிடியி னார்க்கும் கோடுகள் வளியி னார்க்குங் குழலினஞ் சுரும்பி னார்க்கும் முடுசங் கெழிலி யார்க்கும் முரசினங் கடலி னார்க்கும் ஊ டிய வார்ப்பின் சும்மைக் குவமையென் சொல்வே னம்மா . 27. பாடியு மாடி யும்பூப் பறித்துமார்ப் பரித்தும் பேர்த்தும் ஆடிய லரச ரீட்ட பூமணிய யாகச் செல்ல ஏடெழுத் தாணி மேய விருந்தமிழ்க் கொடியி னீட்டம் ஓடிமுன் காண்பே மென்றே யும்பரிற் பறந்து செல்லும். 28. அருநகர்க் குன்ற நீங்கி யருந்தமி ழரச வெள்ளம் வருவழி யாற்றிற் பாய்ந்து வயங்குநா னிலம்ப ரந்து பெருகிய காட்சி யென்னும் பெரும்பயன் படச்சு ருங்கித் திருவமர் மாயோன் செல்வத் திருநகர்க் கடல்புக் கன்றே . 23. மன்னவ ரொன்றோ மற்றும் வண்டமி ழகத்து வாழும் பன்னல மொருக்கு வாய்ந்த பழந்தமிழ் மக்க டம்மோ டின்னிய லிசைகூத் தென்ன வியலுமுப் புலவர் தாமும் தென்னவன் வாழ்க வென்று திருநகர் புகுந்தா ரம்மா. 30. ஆங்கவர் தமையேற் றன் போ டவரவர் தகுதிக் கேற்ற பாங்கினி லிருக்கை நல்கிப் பண் பொடு விருந்து மாற்றித் தேங்கிய புகழா னிற்பச் செந்தமிழ்ச் செல்வ ரந்த ஓங்கிய நகர முள்ள முடைபடும் படியு றைந்தார். 31. தமிழரும் தமிழ்வாழ் வாரும் தமிழ்மொழி வளர்ப்ப தோடு தமிழரின் றலைவ ராகித் தமிழகந் தனைக்காப் பாரும் தமிழகங் கையரும் வந்து தங்கலாற் றமிழன் சீரூர் தமிழராம் பொருள்சேர் காட்சிச் சாலைபோற் பொலிந்த தம்மா . 96, கேசடு-கொம்பு. வளி-காற்று. எழிலி -முகில். மடிய. மாறுபட்ட. சும்மை-தொகுதி.