பக்கம்:இராவண காவியம்.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84. நாற்றிசையு மிசைபுகுமூ ரகமேயோர் நாட்டினுயிர் நாடி யாகும் பேற்றையறிந் தூர்மக்க ளொற்றுமையாய் வாழ்க்கைநலம் பெருகி வாழ்தற் கேற்றமுறை தனின் மக்க ளுடன்பாட்டோ டெச்செயலு மியற்றி நாளும் போற்றிநலம் புரிகுவதே யூராளர் கடமையெனப் பொருணூல் கூறும். 65. முறையற்ற படி நடந்து நோய்க்கிடங்கொ டாதபடி முது நா லெல்லாம் அறைவுற்ற நல்வழியின் படி நடந்து நாடொறுநோ யற்ற வாழ்வே குறைவற்ற செல்வமெனும் மொழியதனைக் கடைப்பிடியாய்க் கொண்டே வாழ்நாள் நிறைவுற்று மக்களெல்லாம் நல்வாழ்வு " பெறச்செயலே நெறிமை யாகும். 66. சோம்பலினா லிள மையைவீண் கழிக்காம லெதிர்காலத் துணைமை யாகித் தேம்பழன மதுபோலத் திருவாக்கிப் பெருவாழ்விற் செறித்தே யுள்ளக் கூம்புதலை யலர்வித்துத் தாய்நாட்டுப் பெருஞ்செல்வக் குவையார் தொம்பை யாம்பலகைத் தொழில்புதிய முறைபயின்றெல் லோருமுயர் வடைய வேண்டும். 67. வேலையதற் கேற்றபடி செய்பொருளின் மதிப்பமைத்தவ் வேலைக் கேற்ற கூலியது பெற்றுமன வெழுச்சியுடன் தொழில் வளர்க்குங் கொள்கைத் தாகிச் சோலையிடைத் தேனுண் ணுந் தும்பியெனத் தொழிலாளர் தொழுதி யுள்ளச் சாலையிடைப் பேருவகை !நடமாடச் செயலரசர் தமக்கேற் பாகும். 64. வன ர க ம-கிராமம். (பலசிற்றூர்கள் கொண்டது) 66, நலவழி-சுகாதாரம், 86, குவை-குவியல். தொம்பை-தெற்குதிர், பணப்பெட்.