பக்கம்:இராவண காவியம்.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராவணகாவியம் 16. 14. சுற்றமு நண்பும் வேள்வித் துறைபயில் குருக்கள் மாரும் மற்றுள பிறரும் வந்து வானக மீன் போல் தொக்கார்; பொற்றொடி மாதர் சூழப் புரவல ரெழுந்து காணக் கொற்றவன் பூவா மூன்று கொம்புட னாங்குப் போந்தான், 15. மூவெழி யாகத் தூணில் முறையொடு குதிரை யாமை ஆவொடு பாம்பு மாடும் அளவிலாப் புள்ளும் துள்ளித் தாவணி யதனிற் பட்டுத் தத்தளித் திருந்த; கண்டார் யாவரும் வியக்க வேள்வி யாண்பரி விளங்கிற் றம்மா! மறைப்படி யமைத்த வேள்விச் சாலையில் வகுத்த வேத முறைப்படி சடங்கை யெல்லாம் முன்னின்று முதியோர்க் கொண்டு நிறைப்பட வரிசை யாக நெடியவர் செய்த வாறே குறைப்பட லின்றி முற்றும் கொழுங்கலைக் கோடன் செய்தான். 17. காரெழு முறைச்ச லென்கோ ! கனைகட லிறைச்ச லென்கோ! பேரிடி முழக்க மென்கோ! பின் னெதை யன்ன . தென்கோ ! சீரிய 1 லவுங் கள்ளுஞ் சிக்குமென் றுரக்கப் பாடும் ஆரியர் மறையி னோசைக் குவமையா னறிகி லேனே, ஆரியர் சோமச் சாற்றை யறப்பிழிந்தெடுத்துத் தேக்கிச் சீரிய முறையில் காய்ச்சிச் சிறந்தகள் ளாக்கி னார்கள்; காரிய முழுது முற்றுப் பெறக்கலைக் கோடன் மன்னா! நேரிழை மூத்தாள் தன்னால் நிகழ்சடங் கதுவொன். றுண்டால், 19. உரியதைச் செய்வீ ரென்ன, உற்றவர் நண்பர் மற்றோர் அரசர்க ளமைச்சர் வேள்வி யாசிரி யன்மா ரெல்லாம் பரிசெனக் கண்கள் காணப் பார்ப்பதற் கலாவி நிற்கும் வரிசையி னிடையே மூத்த கோசலை மானும் வந்தாள். 18. 15, தாவணி- மாடுமுதலியன கட்டுங்கயிறு.