பக்கம்:இராவண காவியம்.pdf/355

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12. 8. ஓதெனப் பேரியாழ் ஒழுங்கு பட்டபோல் காதலன் பிரிவெனும் கவலை யொன் றலால் யாதொரு குறையுமில் லாது செந்தமிழ் மாதர்க ளொடுதக வாழு கின்றனர், 10. நானொரு நாலைந்து நாட்கு முன்னங்கு போனபோ தருந்தமிழ்ப் பூவை மாரொடு யானுமுள் ளுவப்பநல் யாழை மீட்டியே ஏனவள் ஏழிசை இனிக்கப் பாடினள். 11. திருத்தமாச் செந்தமிழ்த் தெரிவை மாரொடு வருத்தமில் லாதுவாய் மலரு முள்ளமும் பொருத்தமாப் பொருளொடு பொலியச் செந்தமிழ் பெருத்தகட்டமிழ்ச்சிபோல் பேசு கின் றனள். அடிக்கடி கேட்டியான் அவட்கு வேண்டுவ முடிக்கிறேன்; பகையெனும் தூரி வேலையை நொடிக்குளே குடித்திடும் நூறி வேலைவ! நடக்கலா மாங்கவள் நலத்தைக் காணவே. 13. என்னவே குயிலொடு பூவை யேந்தெழில் பொன்னென வொளிர்முகப் பொலங்கைக் கிள்ளையும் இன்னலுற் றினை தர இசைப்ப, மன்னவர் மன்னனுஞ் சரியென மகிழ்ச்சி கொண்டனன். தங்கையைக் கண்ணுறுந் தகுதிப் பாட்டினில் எங்கையை யுருக்குலைத் திட்ட பாவியின் மங்கையைக் கண்ணுற மனக்கொண் டானெனில் இங்கதி ராவணன் இயல்புக் கெல்லையே, சாந்தமு மாலையுஞ் சரிகைச் சேலையும் காந்தொளி யணிமணிக் கலனு மேன வும் மாந்தளிர் மேனியர் வளைக்கை நோவுற ஏந்தியே சூழ்வர ஏகி னாரரோ, 15. 12. மூரி-பெரிய,