பக்கம்:இராவண காவியம்.pdf/376

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80 29, புகலடைந்தோர் தம்மையவன் பொன் றினுங்கை விடமாட்டான்; தகவுடையோய்! எம்மரசு தமக்குரைத்த மொழிப்படியோர் பகலினிலே பகைமுடித்துப் பைம்பொன் முடி ' யதுபுனைந்தான்; முகைவிரிந்து மலராகும் முறையேயுன் முதுவாழ்வே. 30. ஆகையினா லிதுபற்றி யையப்பா டி. வேண்டாம்; வேகையிலே சோறுண்ண விரும்புவது முறையாமோ? தோகையைவிட் டிடுமின் றேல் துன்புறுவோம் சிலராமன் வாகைபுனை வானெனவுன் மன்னவனுக் கெதிர்மொழிக. 31. இறைமகனுஞ் சினங்கொண்டே யேகென் பா னேனென்னில், குறையுடையா னெனப்பின்னர்க் குடிபழியாச். 'சூழ்ச்சியிதாம்; நிறைமதியோய்! இனியொன்றும் நினை யாமல் நினைச்சேர்ந்த மறவருடன் கட்டாயம் வழிக்கொள்வா யெனவனுமன், 32. அதுகேட்ட பீடணனும் அனுமானை யுறத்தழுவி புதுவரவே! இந்நன்றி பொன் றிடினும் மறக்கில்லேன் இது தவறேன் என வனுமன் எ ழிலிலங்கைப் பேரரசே! மதிமுகத்தைப் போய்ப்பார்த்து வர நினைக்கின் றேனென்ன. 33. சரியெனவே பீடணனும் தனது திரு மகளான திரிசடையை யழைத்தனுமன் செய்தியினை யவட்குறைப்ப வரிசையுடன் வணங்கியவள் வாருமென மதியனுமன் திரிசடையோ டவள் தோழி செல்லுதல்போற் சென்றானே, 34. அனுமனொரு மறைவிலிருந் தம்மணியென் வரவுரைத்துக் கனிமொழியை மற்றவர்கள் காணாம லீங்கமைத்துப் பனிமொழிநீ வகருவெலப் பாவைமெது வாய்நடந்தே அனை வருங்கண் ணுறங்கிடும்போ தன$டையை யழைத்துவந்தான்,