பக்கம்:இராவண காவியம்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

962 இராவண காவியம் 41. ஐயா நும் பேச்சிலெனக் கையுறவுண் டாகிறது வெய்யோன்' யாரோகாண் விடைகொன்டே னெனவனுமன் கையாழி தனை யீயக் காரிகையுங் கண்ணிலொற்றித் துய்யோனே! யானவர்க்குச் சொன்னதெனச் சொல்லீரே, 42. கனவினுமே தமிழர்பகை காணுதல்தீ தெனவுரையும், புனை மணிமா மதிலிலங்கை போந்தின்னே தமிழிறைவன் தனே வணங்கி மன்னிப்புத் தான் கேட்டுக் கொண்டடியாள் தனையடைந்தே யயோத்தி நகர் தனையடையச் சொல்வீரே. 43. என்றனுக்காத் தென்னிலங்கை இறைமகனோ - டிகல்புரியின் பொன்றிடுவே னெனச்சொல்லிப் புகச்சொல்லும் என் றவள்வேண் டிட,வனுமன் ஏந்திழையே!" அவ்வாறே சென்றுரைப்பே னெனப்பின் னுஞ் சிறுமதியான் பெருந்தேவி 44. அன் னையுனை யான் கண்டே னென் புதனுக் கடையாளம் என்னவெனரி லுன் கணவன் ஏ துரைப்பே னெனமயிலும் தன் னவன் பால் கொடுமென்று சடைவில்லை தலைக்கொடுத்துப் பின்னுமொரு தரங்கூறிப் பெய்வளையோ டகன் றனளே. ஆங்குநின்று திரிசடையோ டவள் போன பிறகனுமன் ஓங்குயலர் மண்டபமும் ஒயிலியலா ராடிடமும் தாங்குமெழி லசோகவிளஞ் சோலையத னியற்கையினைப் பாங்குடனே கண்குளிரப் பார்த்து வெளிப் புறப்பட்டான். தனியாக 11. அனுமப் படலம் 1 சோனை வார்குழல் தோகை பெயர்ந்தபின் பூனை போலப் பொருக்கென் றனுமனும் வானி: னூடு வளர்மதில் வாயிலிற் போன போது புடையமர் காவலர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/378&oldid=987886" இலிருந்து மீள்விக்கப்பட்டது