பக்கம்:இராவண காவியம்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வுப் படலம் பிசி) துன்னி, டாது தமிழ் நாடு காத்தவனுந் தோணி யேறிமுன் னீர்க்கடல் தன்னி லேகையிற் கொடிய ராயிடைத் தள்ளி மாய்த்தகதை யறியையோ. 42. அறமி குத்த கொடை வள்ள லான தமி முன்னை பெற்றமா வலிதனை வறுமை யுற்றனொரு வழியு மில்லையெனை வாழ வைத்தருள்க வென்றுமே சிறுமை யுற்றவொரு வடவ னுற்றருகு சென் றி ரப்பகொடை நேர்கையில் கறுமை யுற்றகொடி யோனு மையகோ கழுத்த ரிந்தகதை யறியையோ? 43. பாரி லொன்றுமிணை யில்லை யென்று தமிழ்ப் பறைய டித்த தமிழ்த் தலைவனாம் சூர னென்றுபெயர் பெற்ற முன்னவனைச் சொரணை யற்றவட, வாரியர் சார மின் றியுரு வார மானவொரு தடிய னாற்றனியு லாவையில் கார மின் றியை யோவொ ழித்தகதை காதி னின்றுகழிந் திட்ட தோ? 44. பம்பி வெந்துற அகன்று பாடியில் பகைத ணிந்தினி திருக்கையில் அம்பி னுங்கொடிய னைய கோவவ உணடைந்து செந்தமிழ் மன்னனாம் சம்ப ரன் றனைக் கொன்றொ ழித்தவீழி தசரதன் புதல்வர் தங்களை வம்ப னேபுகழ்ந் தேத்து கின் றனை மானம் வெட்கமுனக் கில்லையோ? 45, மாண கத்த தமிழ் மன்ன ரைச்செலும் வழியில் வாழ்ந்தால' தமிழரை நாண மின் றியே கொன்ற புல்லரை நல்ல ரென்றுபுகழ் கின் றனை 42. கீ றுமை-கெடுமனம். 44. பம்பி-மிக. வெந்-முதுகு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/405&oldid=987919" இலிருந்து மீள்விக்கப்பட்டது