பக்கம்:இராவண காவியம்.pdf/435

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28. அன்னார்தமை விட்டபி னாரியனும் பொன்னோடு பொருது பொலம்பெயர் மின்னோடிகல் வென்றிகொள் தொன்னகரை முன்னாடியே முற்றிட முன்னினனே. 29. நால்வாய்களு நண்ணிடு தற்கரிய கால்வாய்களு நண்ணிடு தற்குரிய பால்வாய்தக வேட்டை பண்ணிடவே நால்வாய்தக வோர்க்கு நுவன் றனனே. 30. மற்றோர்கரி யேமுதல் மாப்படையைக் கற்றாங்கு கணிக்க வகைப்படவே விற்றாங்கி யெழுந்தனர் மேவலரும் முற்றாக முனைப்போடு சென்றனரே. 31. இவ்வாறவர் முற்றிட வேகிடவே ஒவ்வாத துணிந்துய ரூரணுகும் தெவ்வோர்செய லாய்ந்து செருப்புகலும் செவ்வேலிறை செய்தி யதைத்தெளிவாம். வேறு 32. உடன்பி றந்தின் னுயிர்கொலு நோயென உடன்பிறந்தோ னுயிர்கொல் வாரியன் உடன்பி றந்த வுளவனா வுள்ளவன் உடன்பி றந்ததை யோர்ந்தங் கிராவணன். 83. மின்னு டன்வெடி மேவுதல் மோலிவன் என்னு டன்பிறந் தானினி யென்பயன் உன்னி யுன்னி யொழிப்பது வேதக வென்ன மன்னவ னெண்ணி யிருக்கையில், 34. பாடி விட்டுப் பறந்து பறவையின் ஓடி வந்து பணிந்துமே யொற்றர்கள் கேடு கெட்ட விளையவன் கெட்டான் கூட வீட்டுக் கொடுமைகள் செய்தனன், 28. பொலம். அழகு, ஒலி. முன்னினன்-எண்ணினான். 4, கால்வாய்-யானை. நால்வாய்-நாற்புறவாயில். பால் அசதசாக்கு தியாக. நூல்-படை நூல், 41, செருப்புகலும் - போரை விரும்பும், 39, வெடி-இ+.