பக்கம்:இராவண காவியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகப் படலம்

17


57.சேற்றினை யுமுவார் சேற்றிற் செந்நெலை விதைப்பார் செந்நெல்

காற்றினை நடுவார் நாற்றின் நடுக்களை களைவார் நன்னெல்

காற்றினை யறுப்பார் தூற்றின் சுமையினைச் சுமப்பார் சுற்றும்

ஏற்றினை யுகைப்பா ரேற்றி கல்வலி யுமுநர் வாழ்வே.


58. ஓலையிலாப்பொருளை நீக்கி நிலைப்பொரு ளாக்குமாபோல்

அலையடு பத்ரூம் புல்லு மப்புறப் படுத்தி யான்ற

கலைவலா உள்ளம் போன்ற களத்திடைக் கண மர் மேலை

மலையெனக் குவித்துச் செந்நெல் மணிப்பொலி தூற்று வாரே.


59. தூற்றிய பொலியைத் தங்கள் தொழிலினுக் குதவிநாளும்

ஆற்றிய வினைஞர்க் கெல்லா மள வறிந் தளித்துப் பெற்ற

பேற்றினை யில்கஞ் சேர்த்துப் பெருநிலக் கிழவீதன் னைப்

போற்றியே பொலிக வென்று பொங்கல்வைத் துவக்குவாரே.


60, போர்க்களம் பாடிப் பெற்ற பொன் மலர் பொலியச் சூடி

மாக்கிணைப் பொருநர் செந்தா மரைக்குள மருதம் பாடி

ஏர்க்களம் பாடிப் பெற்ற பரிசினை யிணை யி லாத்தம்

வார்க்களம் பாடுவார் தம் முடைப்பாரி சாக்கு வாரே.


61. மரைமலர்க் குளத்தி லாடும் மயீர்த்தலைச் சிறுவர் நீண்ட

பொருகரிக் குருத்த ளந்து பொம்மெனக் களிப்பரோர்பால்,

குரைகழற் சிறுவர் போரிற் குலுங்கியே தெங்கின்காயைப்

புரைதயப் பறித்துக் காஞ்சிப் புனை நிழலருந்து வாரே.


57. சுற்று தல்-தாம்பாடுதல், போரடித்தல்,

ஏறு - எருது. இகல் மா றுபாடு.

60, கிணை -மரு தப்பறை. ஊர்க்க ளம்-ஊரிடம்,

61. கரிக்குருத்து - யானைக்கொம்பு, போர்.

வைப்போர். புரை தப-குற்றமின்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/45&oldid=1224400" இலிருந்து மீள்விக்கப்பட்டது