பக்கம்:இராவண காவியம்.pdf/452

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5. ஓப்பி லாத வொருவன் மு னாரியன் தப்பி லாவிழி தம்பியு மற்றரும் அப்பு மாரி பொழிய வவையெலாங் குப்பு முத்துக் கொடுங்கணை தூவினன். ஒருவ னோடு பலவ ருடன்றெழுந் துருவ வெங்கணை த வ வொளித்தொகை இரவை நீக்கிப் பகல் தர வேசுடர் வரவு கண்டில ராகி மயங்கினர். 7. செந்நி லத்துருள் செந்தலை சூடிய பொன்னி னத்துப் பொதிந்த முடிமணி மின்ன வானின் விளங்கிடு மீனினம் இன்ன லுற்றிமை யாம லினைந்தன. 8. ஓங்கி யேவு மொருவன் சுடுகணை தாங்கி லாது தசரதன் மைந்தனும் ஈங்கு நிற்க வினியிய லாதெனப் பாங்கு நிற்பவ ரோடு பகர்ந்துமே. 9. அறிந்து சேயவ னாற்றலை முன்கொடு முறிந்து சென்ற முதுகரைப் போலவே, உறந்து தம்பிபின் னோட வகன்றவன் பறந்து சென்றனன் பாசறை யெய்தினான். 10. ஆங்கு நின்றனு மன்முத லாயரை ஓங்கி யோங்கி யுதைத்துத் துரத்தியே நீங்கி வெங்களம் நீள்முடிக் கோயில்புக் கோங்கு தந்தைபா லுற்ற துரைத்தனன். 11. தந்தை கேட்டுக் தழுவித் தாழவியென் மைந்த அன்னை மகனெனப் பெற்ற வெற் கெந்த நாளி லெதுகுறை யீதென வந்த துண்டோ வென வுள் மகிழ்ந்தனன். 5. குப்பு முத்து-வீழ்த் தி. 9. முதுகர்-தோற்றவர். உறந்து-விரைந்து.