பக்கம்:இராவண காவியம்.pdf/489

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இசைவீழ் படலம் 44. கலந்த காதற் கயிற்றினிற் கட்டியே உலந்த போழ்தத் து தவிலா ரென்றெமைப் புலந்து கைவிட்டுப் போயினி ரோவெனக் கலுழ்ந்து நாவலர் கையறம் பாடினர். வேறு 45. புத்துணர்வே யொருநாளும் பொன்றாத பெரும்புகழே புலவ ராயும் முத்தமிழி னுட்பொருளே மூவாத பெரும்பயனே முகையொன் றில்லாக் கொத்தலரும் புதுமலரே கொம்பவிழுந் தீங்கனியே குளிர்தென் காலே அத்தனையு மொவ்வாத வரும்பொருளே யெங்குசென்றீ ரையோ வையோ ! 46, முதுக்குறைவோர் தனிக்காத்த தமிழகத்தை யன் னாரின் முன்னே யாகப் புதுக்குறையொன் றில்லாது தன்னலஞ்செய் தாருயிர்போற் போற்றி வந்தே ஒதுக்கிடமின் றில்லாது கொல்புலிவாய் மான் போல வுதவான் முன்னர் எ துக்கெளியே முயிர் தாங்கித் தனித்துழல் விட்டகன்றீ ரெந்தா யெந்தாய்! 47. பேருலகில் மக்களுக்குப் பேருரிமை யுடை யனெ னும் பெரும்பேர் பெற்றார் யாருடையர் தமிழகத்தைத் தணிக்காத்த பெரியோனே யடல்வே லண் ணால்! காரிருளை முனிந்தோட்டுங் கதிர்நாண வகத்திருளைக் கடிந்தே யோட்.டும் சீருடைய திருவிளக்கே யெமைத்தவிக்க விட்டெங்கு சென்றாய் சென்றாய்! 44, புலந்து-வெறுத்து, க இழந்து-அழுது. கையறம். இரங்கற்பா, 46. முதுக்குறைவு-அறிவு. 47. பேரூரிமையுடையன, விளக்கு என்னும் பெரும் பேர். இராவணன், 49, நந்தாமல் குறையாமல். நயந் து-விரும்பு.